Tuesday, October 15, 2013

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓரிரு நாளில் துவங்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் - www.tnfinds.com - Best Site in the World

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓரிரு நாளில் துவங்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்களில் துவங்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழையை காட்டிலும் வடகிழக்கு பருவமழையால் தான் அதிக பலன். தமிழகம் தவிர ஆந்திராவுக்கும் வடகிழக்கு பருவமழையால் தான் பலன். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும் சரி, வடகிழக்கு பருவமழையும் சரி எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் அவ்வளவாக பெய்யவில்லை. ஆனால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வழக்கத்தை விட 15 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவமழையின் அளவை வைத்தே வடகிழக்கு பருவமழையின் அளவு கணக்கிடப்படும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓரிரு நாளில் துவங்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் இந்த ஆண்டு சராசரியை விட கூடுதலாக வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை முடிந்துள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவமழை பெய்யத் துவங்கும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் இறுதி வரை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: