Friday, October 18, 2013

ஜெயலலிதா பெயர் சூட்டிய புலிக்குட்டி 'சித்ரா' பலி.. மேலும் ஒரு புலியும் இறந்தது! - www.tnfinds.com - Best Site In The World


ஜெயலலிதா பெயர் சூட்டிய புலிக்குட்டி 'சித்ரா' பலி.. மேலும் ஒரு புலியும் இறந்தது!


சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் அடுத்தடுத்து இரு நாட்களில் வெள்ளை புலிக்குட்டியும், வங்கப் புலியும் பலியாகியுள்ளன. சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த ஆண்டு வெள்ளைப் புலிகளான அனு- பீஷ்மர் ஜோடி சேர்ந்தது. அனு, 4 குட்டிகளை ஈன்றது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல்வர் ஜெயலலிதா பூங்காவுக்கு நேரில் வந்து இந்த 4 வெள்ளை புலி குட்டிகளுக்கும் சித்ரா, வித்யா, ஆர்த்தி, காவேரி என பெயர்களை சூட்டினார். இந் நிலையில் கடந்த மாதம் சித்ரா என்ற வெள்ளை புலிக்குட்டிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதன் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்த போது, அதன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 5 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் புலிக்குட்டிக்கு உடல்நிலை சீரானது. மீண்டும் பார்வையாளர்கள் பார்க்க அந்த புலிக்குட்டி விடப்பட்டது. ஆனால் நேற்று காலை வெள்ளை புலிக்குட்டி சித்ரா, திடீரென இறந்து விட்டது. இறந்த வெள்ளை புலிக்குட்டியை பூங்கா வளாகத்திலேயே ஊழியர்கள் அடக்கம் செய்தனர். இந் நிலையில் பூங்காவில் உள்ள 14 வயதான வங்கப் புலியான தேவிக்கு உடல் நிலை சரியில்லாததால் இரண்டு கால்களும் செயலிழந்தன. இதனால் அவதிப்பட்டு வந்த வங்க புலி நேற்று முன்தினம் பரிதாபமாக செத்தது. இந்த வங்க புலி கடந்த 2006ம் ஆண்டு விசாகப்பட்டினம் பூங்காவில் இருந்து வண்டலூருக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 10 நாட்களுக்கு முன் தனக்குப் பிறந்த இரு குட்டிகளை வங்கப் புலி ஒன்று கொன்றுவிட்டதும் குறிப்பிடத்தக்கது. அவை வேறு நிறத்தில் இருந்ததால் இரண்டையும் அந்தத் தாய்ப் புலி கொன்றுவிட்டது. இப்போது இந்தப் பூங்காவில் 12 வெள்ளைப் புலிகளும், 9 வங்கப் புலிகளும் உள்ளன.

More Hot News Click Here....


No comments: