Wednesday, October 30, 2013

தேவர் குருபூஜை: பசும்பொன்னில் அமைச்சர்கள் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கல்வீச்சு, 144 தடை உத்தரவை போட்டுவிட்டு எதற்காக அஞ்சலி செலுத்த வந்தீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் - www.tnfinds.com - Best Site in the World

தேவர் குருபூஜை: பசும்பொன்னில் அமைச்சர்கள் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கல்வீச்சு 144 தடை உத்தரவை போட்டுவிட்டு எதற்காக அஞ்சலி செலுத்த வந்தீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள வந்த அமைச்சர்களின் கார் மீது பொதுமக்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 106வது பிறந்தநாள் மற்றும் 51வது குருபூஜை கொண்டாடப்படுகிறது. குரு பூஜையின் இரண்டாவது நாளான இன்று தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், காமராஜ் உள்ளிட்டோர் தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அமைச்சர் செல்லூர் கே. ராஜு மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு காரில் சென்றுள்ளார். அவருடன் பரமக்குடி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான சுந்தரராஜனும் சென்றுள்ளார். அவர்கள் சென்ற காரை திடீர் என்று பொதுமக்கள் மறித்து 144 தடை உத்தரவை போட்டுவிட்டு எதற்காக அஞ்சலி செலுத்த வந்தீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் குறுக்கிட்டு பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிலர் அமைச்சர்களின் கார் மீது கற்கள் மற்றும் கம்புகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் அமைச்சர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments: