Sunday, October 13, 2013

வைகோ வேண்டாம் கருணாநிதி தான் வேண்டும்: திமுகவில் இணைந்த திருச்சி மதிமுகவினர் - www.tnfinds.com - Best Site in the World

வைகோ வேண்டாம் கருணாநிதி தான் வேண்டும்: திமுகவில் இணைந்த திருச்சி மதிமுகவினர்


சென்னை: மதிமுகவைச் சேர்ந்த மாநில பொதுக்குழு உறுப்பினரும், திருச்சி மாநகராட்சி 46வது வார்டு கவுன்சிலருமான டி.ராமமூர்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்ட மதிமுகவினர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இது குறித்து திமுக வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது, திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 13.10.2013 அன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் மதிமுகவைச் சேர்ந்த திருச்சி மாவட்டம், மாநில பொதுக்குழு உறுப்பினரும் - திருச்சி மாநகராட்சி 46வது வார்டு கவுன்சிலருமான டி.ராமமூர்த்தி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் சி.மூவேந்திரன் ஆகியோர் தலைமையில் மதிமுகவைச் சேர்ந்த திருச்சி மாநகரம், 46வது வட்டச் செயலாளர் எம்.சாமிநாதன், 46வது வட்ட துணைச் செயலாளர்கள் ஓ.குமார், பி.சொக்கன், ஆர்.பிரகாஷ், 46வது வட்ட இளைஞர் அணிச் செயலாளர் ஏ.சந்தோஷ்குமார், ஜங்ஷன் பகுதி துணைச் செயலாளர் எம்.ரமேஷ், 46வது வட்ட பிரதிநிதி பி. பிரபாகரன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ். பிரகாஷ், வி.பெருமாள் மற்றும் ஐ.காஜா, எம்.சரவணன், இ. சகாயம், எஸ்.சுரேஷ், எம்.மாரிமுத்து, ஆர்.மருதராஜ், கே.வினோத், சோலை பாஸ்கர், பாண்டியன், ஆர்.மகேஷ்குமார், எம்.ரமேஷ், எஸ்.கலியமூர்த்தி, எம்.மணி, எஸ்.மணிவர்மா, சி.ரமேஷ், வி.கோபி, எம்.கார்த்தி, ஏர்வாடி, சேக்பரிக், வி.சுப்பன், சக்திவேல், ராஜாகண்ணா, என்.மோகன்ராஜ், எம்.சிதம்பரம், பார்த்திபன், கண்ணன், சுதாகர், கார்த்திகேயன், பி.தன்ராஜ், எல்.வெங்கடேஷ், என்.செல்வம், டி.பெருமாள், ஜி.லோகநாதன், ஏ.அருள்பாண்டியன், எம்.விஜய், பழனிச்சாமி, மாரியப்பன், எஸ்.ஆறுமுகம், நாராயணன், எம். மோகன், ஐ.ஜபார், சீனிவாசன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மதிமுகவினர் திமுகவில் இணைந்தனர். அதுபோது திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், தொட்டியம் ஒன்றியச் செயலாளர் சீமானூர் ச.பிரபு, இலால்குடி பேரூர்ச் செயலாளர் பி.துரைமாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: