2 மணிநேரம் கிரிக்கெட் விளையாடிய ஐஐடி மாணவர் மாரடைப்பால் மரணம்.
கான்பூர்: ஐஐடி கான்பூரில் எம்.டெக். முதலாம் ஆண்டு படித்து வந்த 23 வயது மாணவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் தாராபூரைச் சேர்ந்தவர் மோஹித்(23). அவர் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஐஐடியில் எம்.டெக். படித்து வந்தார். அவர் இந்த ஆண்டு தான் ஐஐடியில் சேர்ந்தார்.
இந்நிலையில் அவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 2 மணிநேரம் கிரிக்கெட் விளையாடியுள்ளார். விளையாடிவிட்டு விடுதியில் உள்ள தனது அறைக்கு ஓய்வு எடுக்கச் சென்றார். சிறிது நேரம் கழித்து அவரது நண்பர்கள் அறைக்கு வந்தபோது மோஹித் சுயநினைவின்றி தரையில் கிடந்தார். உடனே அவரை கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர் மரணம் அடைந்தார். மோஹித் மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment