Tuesday, December 3, 2013

ஸ்டெம்செல்கள் மூலம் செயல்பாட்டு நுரையீரல் செல்கள்: மருத்துவ உலகில் புதிய சாதனை - www.tnfinds.com - Bets site in the world..

ஸ்டெம்செல்கள் மூலம் செயல்பாட்டு நுரையீரல் செல்கள்: மருத்துவ உலகில் புதிய சாதனை

ஸ்டெம் செல்களைக் கொண்டு புதிய நுரையீரல் செல்களை உருவாக்கி அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
ஸ்டெம்செல்கள் மூலம் இதுவரை இதய செல்கள், கணைய பீட்டா செல்கள், குடல் செல்கள், கல்லீரல் செல்கள், நரம்பு செல்கள் போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஸ்டெம்செல்கள் மூலம் முதன்முறையாக செயல்பாட்டு நுரையீரல் செல்களை உருவாக்கி புதிய சாதனை நிகழ்த்தியுள்ளனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.

நுரையீரல் செல்கள்....




அமெரிக்காவின் கொலம்பியா மருத்துவ மையத்தின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனித ஸ்டெம்செல்களைக் கொண்டு முதன்முறையாக செயல்பாட்டு நுரையீரல் செல்களை உருவாக்கியுள்ளனர்.

முக்கியத்துவம் வாய்ந்தது....

இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், நுரையீரல் நோய் குறித்த மாதிரிகளை ஆய்வு செய்வதிலும், மருந்துகளைப் பரிசோதிப்பதிலும், மனித நுரையீரல் வளர்ச்சிகளைப் பற்றி அறிவதிலும், மாற்று நுரையீரல் திசு உருவாக்குவதிலும் முக்கியத்துவம் பெறுவதாக கருதப்படுகிறது.

புதிய முன்னேற்றம்....

தனது ஆராய்ச்சி முடிவுகள் குறித்து மருத்துவ பேராசிரியர் ஹான்ஸ் வில்லியம் கூறுகையில், ‘நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது பெரிய முன்னேற்றத்தை இதுநாள்வரை கொண்டிருக்கவில்லை. எனவே, தற்போதைய கண்டுபிடிப்பு இந்த சிகிச்சையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

நுரையீரல் மாற்றுச் சிகிச்சை....


இவற்றை முறையாகப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர பல வருடங்கள் ஆகும் என்றபோதிலும், ஒரு நோயாளிக்கு அவரது தோலைப் பயன்படுத்துவதன் மூலம் நுரையீரல் மாற்று சிகிச்சை அளிப்பது குறித்து நாம் யோசிக்கத் தொடங்கமுடியும்' எனத் தெரிவித்துள்ளார்.
More Hot News Click Here...



No comments: