Sunday, December 8, 2013

ஏற்காடு தேர்தல்- யாருக்கும் வாக்களிக்கவில்லை என நோட்டாவில் 4, 076 பேர் பதிவு!! - www.tnfinds.com - Best Site in the World

ஏற்காடு தேர்தல்- யாருக்கும் வாக்களிக்கவில்லை என நோட்டாவில் 4, 076 பேர் பதிவு!!


சேலம்: ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் 4076 பேர் நோட்டாவை பயன்படுத்தி யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவு செய்துள்ளனர். ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதற்கான நோட்டா பட்டனும் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டது. ஏற்காடு தேர்தல்- யாருக்கும் வாக்களிக்கவில்லை என நோட்டாவில் 4, 076 பேர் பதிவு!! இன்றைய வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு சுற்றிலும் சுமார் 200 முதல் 300 வாக்குகள் நோட்டா பட்டனுக்கு விழுந்து இருந்தது. இறுதியாக மொத்தம் 4,076 பேர் நோட்டாவை பயன்படுத்தி யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவு செய்திருந்தனர்.

No comments: