டெல்லி தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை- தொடரும் இழுபறி! காங். படுதோல்வி!!
டெல்லி: டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி 10
இடங்களைக் கூட கைப்பற்ற முடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது. மேலும்
பாஜக, ஆம் ஆத்மி உட்பட எந்த கட்சியும் ஆட்சி அமைக்கக் கூடிய பெரும்பான்மையை
எட்ட முடியாத வகையில் இழுபறி நிலைமை உருவாகி இருகிறது.
டெல்லி மாநிலத்தில் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் பதிவான வாக்குகள்
எண்ணிக்கை இன்று நடைபெற்றது. தொடக்கம் முதலே பாரதிய ஜனதா கட்சி முன்னிலை
வகித்தது. ஆனால் ஆளும் காங்கிரஸுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும்
வகையில் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 2வது இடத்தை கைப்பற்றியது.
டெல்லி தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை- தொடரும் இழுபறி! காங்.
படுதோல்வி!!
காங்கிரஸ் கட்சியால் 10 தொகுதிகளில் கூட முன்னிலையை எட்ட முடியவில்லை. ஒரு
கட்டத்தில் மாநிலத்தில் தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய வகையில் முன்னிலையை
எட்ட இருந்தது பாஜக. ஆனால் பின்னர் நிலைமை மாறியது.
மாலை 5 மணி நிலவரப்படி 59 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
இதில் பாஜக 30 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 21 இடங்களையும்
கைப்பற்றியிருந்தன. ஆளும் காங்கிரஸ் கட்சியோ 7 இடங்களில்தான்
வென்றிருந்தது.
மேலும் பாஜக 3 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 6 தொகுதிகளிலும் காங்கிரஸ் 1
இடத்திலும் முன்னிலை வகித்தன.
No comments:
Post a Comment