டீசல் விலை 50 காசுகள் உயர்வு! பெட்ரோல் விலை உயர்வில் மாற்றம் இல்லை!!
டெல்லி: டீசல் விலை 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. இதனால் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

இந்நிலையில் டீசல் விலையை உயர்த்துவது பற்றி கிரித் பரிக் தலைமையிலான கமிட்டியும் விலையை லிட்டருக்கு 4 முதல் 5 ரூபாய் வரை உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில் இம்மாதத்தில் 2வது முறையாக டீசல் விலையை இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment