Tuesday, December 3, 2013

ஊசி மூலம் 46 பேருக்கு மஞ்சள் காமாலை பரப்பிய லேப்டெக்னீசியனுக்கு 39 ஆண்டுகள் சிறை - www.tnfinds.com - Best site in the world...

ஊசி மூலம் 46 பேருக்கு மஞ்சள் காமாலை பரப்பிய லேப்டெக்னீசியனுக்கு 39 ஆண்டுகள் சிறை

ஊசி மூலம் 46 பேருக்கு மஞ்சள் காமாலை பரப்பிய லேப்டெக்னீசியனுக்கு 39 ஆண்டுகள் சிறை
நியூயார்க்: வலி நிவாரணிகளைத் திருடி அவற்றில் ஆல்கஹால் கலந்து அவற்றை நோயாளிகளுக்குச் செலுத்தி மஞ்சள்காமாலை மற்றும் கல்லீரல் நோய்களைப் பரப்பிய அமெரிக்க லேப் டெக்னீசியனுக்கு 39 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூஹம்ப்ஷியர் பகுதியைச் சேர்ந்த 34 வயது லேப் டெக்னீசியன் டேவிட் கியாட் கோவ்ஸ்கி. இவர் 3 மாகாணங்களில் 18 ஆஸ்பத்திரிகளில் மாறி மாறி பணி புரிந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு, 46 நோயாளிகளுக்கு மஞ்சள்காமாலை நோயை பரப்பியதற்காக டேவிட் கைது செய்யப் பட்டார். அதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப் பட்ட விசாரணையில், டேவிட் தடை செய்யப்பட்ட மருந்துகளை பலருக்கு செலுத்தியதும், பல மருந்துகளை திருடியதும் அம்பலமானது.
மேலும், வலி நிவாரண மருந்துகளை திருடி அதனுடன் ஆல்கஹாலை கலந்து கெட்டுபோன ஊசி மூலம் நோயாளிகளின் உடலில் செலுத்தி, அதன் மூலம் பலரை மஞ்சள் காமாலை, கல்லீரல் உள்ளிட்ட நோய் பாதிப்புக்கு டேவிட் ஆளாக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
வழக்கு விசாரணையில் டேவிட் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 39 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
                                        More Hot News Click Here...   

No comments: