விறுவிறுப்பான எதிர்பார்ப்புடன் நாளை மே.இ. தீவு, நியூசி. முதல் டெஸ்ட்
டுனிடின்: ஐசிசி தரவரிசைப் பட்டியலில் மேலே போக வேண்டும் என்ற இலக்குடன் மேற்கு இந்தியத் தீவுகளும், நியூசிலாந்தும் நாளை தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் சந்திக்கின்றன.
தற்போது டெஸ்ட் தரவரிசையில் 6வது இடத்தில் இருக்கிறது மேற்கு இந்தியத் தீவுகள். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அந்த அணி வென்றாலும் கூட பொசிஷனில் மாற்றம் இருக்காது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கும், தனக்கும் இடையே இருக்கும் பெரிய இடைவெளியை அந்த அணி வெகுவாக குறைக்க முடியும்.

நியூசிலாந்து அணி தற்போது 8வது இடத்தில் இருக்கிறது. இந்த அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றால், மேலே உயர்ந்து வரும். 3-0 என்ற கணக்கில் வென்றால் இன்னும் முன்னேற்றம் கிடைக்கும். அதாவது மேற்கு இந்தியத் தீவுகள் அணியை பின்னுக்குத் தள்ளி விடலாம். அதாவது 7வது இடத்துக்கு அது போய் விடும்.
அதேசமயம், மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்த தொடரை எப்படி வென்றாலும், 4வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவை முந்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தத் தொடரில் வெல்வது இரு அணிகளுக்குமே முக்கியமானது. காரணம், 2016ல் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், தரவரிசையில், முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகள்தான் பங்கேற்க முடியும். எனவே தொடரை வென்று தங்களது நிலையை மேம்படுத்த இரு அணிகளுமே முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment