Monday, December 2, 2013

இளையராஜா ரசிகர்களே இந்தவாரம் உங்கள் வாரம்! - www.tnfinds.com - Best site in the world..

இளையராஜா ரசிகர்களே இந்தவாரம் உங்கள் வாரம்!

சென்னை: சன் டிவியில் இந்த வாரம் இசைஞானி இளையராஜாவின் ரசிகர்களுக்குப் பிடித்தமான வாரம். ஆம், இந்த வாரம் இளையராஜா வாரம். இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை இளையராஜாவின் இசையில் உருவான சூப்பர் ஹிட் படங்களை ஒளிபரப்பவுள்ளனர்.
சன் டிவியில் ஒவ்வொரு வாரமும் தினசரி இரவு 11 மணிக்கு ஒரு வாரமாக படங்களைப் போட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் இந்த வாரம் இளையராஜா வாரம் என்று அறிவித்துள்ளனர். இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு தோறும் 11 மணிக்கு இளையராஜாவின் இசையினால் பிரபலமான படங்கள் ஒளிபரப்பாகவுள்ளன.

காதலுக்கு மரியாதை

திங்கள்கிழமையான இன்று இரவு 11 மணிக்கு காதலுக்கு மரியாதை ஒளிபரப்பாகிறது. பாடல்களுக்காகவும், கதைக்காகவும், நடிப்புக்காகவும் பேசப்பட்ட படம் இது. விஜய், ,ஷாலினி, சிவக்குமார், ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

செவ்வாய் நாயகன்

செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு நாயகன் ஒளிபரப்பாகிறது. பெரும் பரபரப்பாக பேசப்பட்ட படம் இது. கமல்ஹாசன், சரண்யா, நாசர் நடிக்க, மணிரத்தினம் இயக்கிய படம். கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்த படம். டைம் பத்திரிக்கையில் சிறந்த படமாகவும் தேர்வானது. எல்லாவற்றையும் விட முக்கியமாக, இளையராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும் வரலாறு படைத்தன.

புதன்கிழமை மெளனராகம்

காதலின் அழுத்தத்தையும், ஆழத்தையும் அழகாக அந்தக் காலத்தில் காட்டிய படம் மெளன ராகம். கார்த்திக்கின் அதிரடி நடிப்பும், மோகன், ரேவதியின் பண்பட்ட நடிப்பும், இந்தப் படம் முழுக்க இளையராஜாவின் இசைதான் அமர்க்களமாக இருக்கும். அவரது இசையில் உருவான முத்து முத்தான பாடல்களும் ரசிகர்களால் மறக்க முடியாது.

வியாழக்கிழமை ஜானி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அபாரமான நடிப்பை வெளிக்கொணர்ந்த அரிய படங்களில் இதுவும் ஒன்று. இரண்டு வேடங்களில் நடிப்பில் பிரமாதப்படுத்தியிருப்பார் ரஜினிகாந்த். கூடவே ஸ்ரீதேவியின் அழகான நடிப்பும். மகேந்திரனின் பண்பட்ட இயக்கத்தில் உருவான நல்ல படம் இது. இளையராஜாவின் இசை இந்தப் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கும்.

வெள்ளிக்கிழமை 

கரகாட்டக்காரன்

எப்போது பார்த்தாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும், லயித்து ரசிக்க வைக்கும் படம் கரகாட்டக்காரன். இளையாராஜாவின் இசைக்காகவே ஓடிய சாதனைப் படம் இது. ராமராஜனை சூப்பர் நடிகராக மாற்றிக் காட்டிய படமும் கூட. வாழைப்பழ காமெடியை இப்போது பார்த்தாலும் வெடித்துச் சிரிக்கலாம்.

More Hot News Click Here

No comments: