Monday, December 2, 2013

ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொலை.. குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய பாஜக தலைவர் கைது..- www.tnfinds.com.- best site in the world.

ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொலை.. குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய பாஜக தலைவர் கைது

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் படுகொலை வழக்கில் பல்வேறு தீவிரவாத குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய இந்தூர் மாவட்ட பாஜக இளைஞர் அணித் துணைத் தலைவர் ஜிதேந்திர சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மோ என்ற ஊரில், கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த முன்னாள் தொண்டர் சுனில் ஜோஷி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் விசாரித்து வந்தனர்.
கொலை செய்யப்பட்ட ஜோஷி மீது பல வழக்குகள் உள்ளன. அதில் முக்கியமானது, சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு வழக்காகும்.
அதேபோல சர்மாவும், ஆஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் ஆவார். இதுதவிர மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு, சம்ஜாதா குண்டுவெடிப்பு வழக்கிலும் இவருக்குத் தொடர்பு உள்ளது. இவர் வக்கீலும் கூட.
முன்னதாக ஜோஷி கொலை வழக்கில் திலீப் ஜகதாப் என்பவரை என்ஐஏ கைது செய்திருந்தது. இவரிடம்தான் ஜோஷியைக் கொல்ல சர்மா துப்பாக்கியைக் கொடுத்திருந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து தற்போது சர்மாவைக் கைது செய்துள்ளனர்.

No comments: