Monday, December 2, 2013

ஆம்புலன்ஸுக்கு வழி விடுங்கப்பா.. தொண்டர்களை ஓரம் கட்டிய மு.க.ஸ்டாலின்..- www.tnfinds.com.-best site in the world

ஆம்புலன்ஸுக்கு வழி விடுங்கப்பா.. தொண்டர்களை ஓரம் கட்டிய மு.க.ஸ்டாலின்

ஆம்புலன்ஸுக்கு வழி விடுங்கப்பா.. தொண்டர்களை ஓரம் கட்டிய மு.க.ஸ்டாலின்
ஏற்காடு: ஏற்காடு இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது, ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியுடன் வந்ததைப் பார்த்த, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பேச்சை நிறுத்தி விட்டு தொண்டர்களை ஒதுங்கி நின்று வழிவிடுமாறு உத்தரவிட்டார்.
ஏற்காடு இடைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் பருத்திக்காடு என்ற கிராமத்தில் வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது, ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று ஒலி எழுப்பியவாறே மிக விரைவாக வந்து கொண்டு இருந்தது. அப்போது இதைக் கண்ட மு.க. ஸ்டாலின் உடனே தனது பேச்சை நிறுத்திக் கொண்டு, உடனடியாக அனைவரும் ஆம்புலன்ஸ்க்கு வழி விடுங்கள் என்று திமுகவினரை கேட்டுக் கொண்டார்.
அப்போது அங்கே கூடியிருந்த மக்கள் உடனே தாங்கள் வந்த வாகனம் முதல் அனைத்தையும் ஓரம் கட்டி இரு வழியாகப்பிரித்து ஆம்புலன்ஸ் செல்ல வழியை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் தேர்தல் பிரச்சாரம் செய்த போது, ஆத்தூரிலிருந்து உயிருக்குப் போராடிய ஒரு முதியோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், நோயாளி ஒருவர் உள்ளே இருக்கிறார் என்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறியும் அந்த வாகனத்தை போலீசார் விட மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடதக்கது..

No comments: