Wednesday, December 4, 2013

ஆபீஸ்ல ஒரே டென்ஷனா இருக்கா?.. .இந்தாங்க டிப்ஸ்...! - www.tnfinds.com - Best site in the world..

ஆபீஸ்ல ஒரே டென்ஷனா இருக்கா?.. .இந்தாங்க டிப்ஸ்...!

வேகமாக சுற்றும் உலகத்திற்கு இணையாக நாமும் ஓடிக் கொண்டிருக்கின்றோம். எதனால் என்று பார்த்தால், பணம் சம்பாதிப்பதற்கு. பணம் சம்பாதிப்பது நம் தேவைக்காக, பணம் இருந்தால் சொத்து வரும், வசதி வரும், செல்வாக்கு வரும், கூடவே மன அழுத்தமும் வந்து சேர்கிறது. மன அழுத்தம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. இன்றைய சுறுசுறுப்பான வேலைப்பளுமிக்க நம் வாழ்க்கை முறையில், மன அழுத்தமானது தவிர்க்க இயலா ஒரு அங்கமாகவே மாறித்தான் போய்விட்டது.
நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த நம் மனதை இந்த அழுத்தத்தில் இருந்து வேறு ஏதாவது சிந்தனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நாம் செய்யும் செயல்கள் நமக்கு பிடித்த விஷயமாக மட்டுமில்லாமல், அது நம் கவலைகளையும் மறக்கச் செய்வதாக இருக்க வேண்டும். இதுபோக இந்த அழுத்தத்தை நீக்க பல மருந்து மாத்திரைகளும் உள்ளது. ஆனால் பக்க விளைவுகள் இல்லாமல் மாத்திரைகள் வேண்டுமா? அப்படியானால் இயற்கையான முறையில் மன அழுத்தத்தை நீக்க 9 வழிகள் உள்ளது. அதனை பின்பற்றி மன அழுத்தத்தை குறைத்திடுங்கள்.

சிரியுங்கள்.

அனைவருக்குமே அலுவலக மற்றும் குடும்ப பொறுப்புக்கள் அதிகமாக இருக்க தான் செய்கிறது. அதற்காக அதிகமாக மன அழுத்தத்திற்கு ஆளானால், அது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கூடுதல் கஷ்டத்தை தான் கொடுக்கப் போகிறது. இதிலிருந்து விடுபட பல வழிகள் இருக்கிறது - பிடித்த நகைச்சுவை படங்களை கண்டு களியுங்கள் அல்லது உயிர் நண்பர்களை சந்தித்து சந்தோஷமான நினைவுகளை பற்றி பேசி அரட்டை அடியுங்கள். ஏனெனில் வாய் விட்டு சிரிக்கும் ஒவ்வொரு முறையும், உறுப்புகளுக்கு ஆக்சிஜன் அளவு அதிகமாக செல்லும். மேலும் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மன அழுத்தம் நீங்கும் என்றும் பல ஆராய்ச்சிகள் கூறுகிறது.

செல்ல பிராணிகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.

செல்லப் பிராணிகள் என்பது கணக்கில்லாத காதலுக்காக மட்டும் கிடையாது. அதனுடன் நேரத்தை செலவிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்துக்கும் நன்மையாக விளங்கும். அதிலும் செல்ல பிராணிகளான நாய் அல்லது பூனையை கொஞ்ச நேரம் கொஞ்சினாலும் போதும், மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் ஹார்மோன்களான செரோடோனின், ப்ரோலேக்டின் மற்றும் ஆக்சிடோகின் சுரக்கும். மேலும் மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களின் அளவும் குறையும். இதனால் இரத்த அழுத்தம் குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இரைச்சலை தவிர்க்கவும்.

நீங்கள் வசிக்கும் சின்ன இடம் கசகசவென இருக்கிறதா? அளவுக்கு அதிகமான இரைச்சல் மற்றும் ஆரவாரம் உங்களை திணறடித்து, உங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். இரைச்சலான சுற்றுச்சூழலில் குடி கொண்டிருந்தால், தேவையில்லாத எரிச்சலை உண்டாக்கும். அதனால் மன அழுத்தம் நீங்க இரைச்சலை தவிர்க்க வேண்டும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அதற்காக அனைத்தையும் உடனே மாற்ற வேண்டும் என்றில்லை. அது உங்களை இன்னமும் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக்கும். ஒரு சின்ன இடத்தில் தொடங்கி, படி படியாக ஒதுக்குங்கள். சுத்தமான இட வசதியுடன் கூடிய இடம் உங்களை அமைதிப்படுத்தும்.

வீட்டு வேலை செய்யுங்கள்.


வீட்டு வேலை என்பது தினமும் செய்யக்கூடிய உலகம் சார்ந்த பொதுவான ஒன்றாக இருந்தாலும் கூட, அதனை சற்று வித்தியாசப்படுத்துங்கள். உங்களுக்கு பிடித்த இசை அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை பின்னால் ஓட விடுங்கள். நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டு கொள்ளுங்கள். பின் ஒவ்வொன்றாக செய்ய தொடங்குங்கள். இதனால் கலோரிகள் குறைவதோடு மட்டுமல்லாமல், சோர்வடைய செய்யாமல் மன அழுத்தத்தையும் நீக்கும்.

ஜூஸ் குடியுங்கள்.


ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி இருப்பதால், அவை மன அழுத்தத்தை நீக்க பெரிதும் துணை புரியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதற்கு காரணம் கார்டிசோல் போன்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் அளவை, அது குறைக்க உதவும். மேலும் வைட்டமின் சி நிறைந்துள்ள ஆரஞ்சு ஜூஸ், திராட்சை ஜூஸ், ஸ்ட்ராபெர்ரி அல்லது இனிப்பான சிவப்பு குடைமிளகாய், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

சத்தமாக பாடுங்கள்.


மனம் திருப்தி படுமாறு கடைசியாக நீங்கள் எப்போது சத்தமாக பாடினீர்கள்? உங்கள் வீட்டு ரேடியோவை போட்டு விட்டு, அதனோடு சேர்ந்து பாடுங்கள். உங்கள் குரல் எவ்வளவு மோசமாக இருந்தாலும் பரவாயில்லை. பாடுவது உங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி, உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மேலும் அது சுவாசம், இதயம் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்புகளுக்கு பயனை அளிக்கும்

நடை கொடுங்கள்.


மன அழுத்தத்தை குறைக்க உடற்பயிற்சி ஒரு முக்கிய வழியாக திகழ்கிறது. அது உடலில் என்டோர்ஃபின்னை உற்பத்தி செய்ய உதவும். அதுவும் வெதுவெதுப்பான வானிலையில் உடற்பயிற்சி செய்தால், மனநிலை நன்றாக இருக்கும். மேலும் தினமும் 30 நிமிடங்கள் நடந்தால், மன அழுத்தம் வெகுவாக குறையும்.

உடலுறவில் ஈடுபடுங்கள்.


உடலுறவில் ஈடுபடாமல் இருக்க மன அழுத்தத்தை ஒரு காரணமாக நீங்கள் கூறினால், மறுபடியும் ஒரு முறை யோசியுங்கள். உடலுறவு கொள்வது என்பது மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு வழி என்பதை அறிவீர்களா? ஆம், அது இரத்த அழுத்தத்தை குறைத்து, சுய மதிப்பை ஊக்குவித்து, கணவன்/மனைவியுடனான நெருக்கத்தை அதிகரிக்கும். மேலும் அது நல்ல தூக்கத்தை கொடுக்கும்

ஆழமாக மூச்சு விடுங்கள்.


லாவெண்டர் அல்லது ரோஸ் பர்ஃப்யூம்களை வாங்கி, அதனை நுகர்ந்தால் போதும், அது உடனடியாக மன அமைதியை தந்து மன அழுத்த ஹார்மோனான கோர்டிசெலின் அளவை குறைக்கும். ஒருவேளை பர்ஃப்யூம்கள் பிடிக்கவில்லை என்றால் ஆழமாக மூச்சு விடும் பயிற்சியில் ஈடுபடுங்கள். இது இரத்த ஓட்டத்தில் ஆக்சிஜனை அதிகமாக செலுத்தும். அதனால் சாந்தமடைந்து மன அழுத்தம் குறையும்.

More Hot News Click Here..

No comments: