கஸ்டடியில் கதறி அழுத தேஜ்பால்! பலாத்காரத்தை நடித்து காட்ட சொல்கிறது போலீஸ்?

பனாஜி: பலாத்கார புகாரில் சிக்கிய டெஹல்கா முன்னாள் நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பால்போலீஸ் கஸ்டடியின் போது கதறி அழுததாக கூறப்படுகிறது.
சக பெண் பத்திரிகையாளரை கோவா ஹோட்டல் லிப்ட் ஒன்றில் வைத்து பலாத்காரம் செய்தார் தருண் தேஜ்பால் என்பது வழக்கு. இந்த வழக்கில் தருண் தேஜ்பாலின் முன் ஜாமீன் மனுவை கோவா நீதிமன்றம் சனிக்கிழமை நிராகரித்தது.
இதைத் தொடந்து அவரை கோவா போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை 14 நாள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடைபெற்றது. தருண் தேஜ்பாலை 6 நாள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது.
இதனையடுத்து முதல் நாளான நேற்று மாலை 3 மணி முதல் ஐந்து மணி நேரம் தருண் தேஜ்பாலிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த வழக்கில் டெஹல்கா பத்திரிகையாளர்கள் அளித்த வாக்குமூலங்களுடன் தருண் தேஜ்பால் தெரிவித்த விவரங்களை போலீசார் சரிபார்த்தனர். அத்துடன் தேஜ்பாலிடன் செல்போனை கைப்பற்றி பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளருடன் அவர் எப்போதெல்லாம் பேசினார் என்பதையும் போலீசார் ஆராய்ந்தனர்.
போலீசாரின் 5 மணி நேர விசாரணையின் போது தேஜ்பால் சில நேரங்களில் கதறி அழுததாக கூறப்படுகிறது. தேஜ்பாலுக்கு எதிரான சாட்சியமாக இருப்பது சிசிடிவி காமிரா பதிவுதான்.
மேலும் தருண் தேஜ்பால் லிப்டில் வைத்து எப்படி பலாத்காரம் செய்தார் என்பதை நடித்துக் காட்டவும் கூட போலீசார் சொல்லக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment