என்னை போய் இப்படி நினைத்துவிட்டார்களே!: கவலையில் தமன்னா
சென்னை: தமன்னா தன்னைப் பற்றி வரும் ஒரு செய்தியால் மனம் நொந்து போயுள்ளாராம்.
தமன்னா தற்போது அஜீத்தின் வீரம் படத்தில் நடித்துள்ளார். படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இது தவிர அவர் தெலுங்கில் ஒரு படத்திலும், இந்தியில் 2 படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவரை பற்றி வரும் ஒரு செய்தி அவரை கவலையில் ஆழ்த்தியுள்ளதாம்.
ஸ்ருதி.

தமன்னாவுக்கும், ஸ்ருதி ஹாஸனுக்கும் ஏழாம் பொருத்தம் என்று செய்திகள் வருகின்றன. தமன்னாவை போன்று ஸ்ருதியும் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
கொண்டாட்டம்.

ஸ்ருதி நடித்த ராமையா வஸ்தாவய்யா தெலுங்கு படம் ஊத்திக் கொண்டது. இந்நிலையில் ஸ்ருதியின் படம் பப்படமானதை தமன்னா கேக் வெட்டி கொண்டாடினார் என்று செய்திகள் வருகின்றன.
கவலை.

ஸ்ருதியின் தோல்வியை தான் பார்ட்டி கொடுத்து கொண்டாடியதாக வரும் செய்திகளை பார்த்து தமன்னா கவலை அடைந்துள்ளாராம். தன்னை பற்றி இப்படி அபத்தமாக செய்திகள் வருகிறதே என்பது தான் அவரின் கவலைக்கு காரணமாம்.
மார்க்கெட் பிக்கப்.

தமிழில் டல்லடித்திருந்த தமன்னாவின் மார்க்கெட் தற்போது பிக்கப்பாகி வருகிறது. வீரம் படத்தை அடுத்து அவர் ஆர்யா மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment