கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கோளாறு- மின் உற்பத்தி நிறுத்தம்
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் அமைந்துள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு மின் உற்பத்தி 400 மெகா வாட்டாக உயர்ந்தது. முதல் அணு உலையில் மின் உற்பத்தி துவங்கி 160 மெகாவாட்டில் இருந்து 280 மெகாவாட் என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், இம் மின் உற்பத்தி 400 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டது. இதனிடையே திங்கள்கிழமை பகல் 12.41 மணிக்கு முதல் அணு உலையில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதாக நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார். இந்த தொழில்நுட்ப கோளாறு இரண்டு அல்லது மூன்று நாட்களில் சரி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment