விஜய், சிம்புவிடம் டிப்ஸ் பெற்று நடிக்கும் ஜி.வி. பிரகாஷ்
சென்னை:படத்தில் நடித்து வரும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கு விஜய்யும், சிம்புவும் நடிப்பதற்கு டிப்ஸ் கொடுத்துள்ளார்களாம். இசையமைப்பாளராக வலம் வந்த ஜி.வி. பிரகாஷ் திருமணம் முடிந்த கையோடு ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். கௌதம் மேனனிடம் துணை இயக்குனராக இருந்த மணி நாகராஜ் இயக்கும் பென்சில் படத்தில் தான் ஜி.வி. நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நாயகி ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார்
முதல் படமா?
பென்சில படத்தின் படப்பிடிப்பில் ஜி.வி. நடிப்பில் அசத்தி வருகிறாராம். அவரது நடிப்பை பார்க்கிறவர்கள் உங்களை பார்த்தால் இது முதல் படம் போன்று தெரியவில்லை. ஏதோ அனுபவம் உள்ள ஹீரோ போன்றல்லவா நடிக்கிறீர்கள் என்று கூறுகிறார்களாம்.
விஜய், சிம்பு
நான் சிலரிடம் நடிப்பு பயிற்சி பெற்றுள்ளேன். மேலும் எனக்கு விஜய் மற்றும் சிம்பு ஆகியோர் நடிப்பது பற்றி ஏராளமான டிப்ஸ் கொடுத்துள்ளனர் என்கிறாராம் ஜி.வி.
நோ கிஸ்
படத்தில் நடிகைக்கு லிப் டூ லிப் கொடுக்கக் கூடாது, ஓவர் நெருக்கமாக நடிக்கக் கூடாது என்று ஜி.வி. பிராகஷுக்கு அவரது காதல் மனைவி சைந்தவி கன்டிஷன் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனதில் வைத்து தான்
மனைவி போட்ட கன்டிஷன்களை மனதில் வைத்து தான் நடித்து வருகிறாராம் ஜி.வி. பிரகாஷ். பென்சில் படத்திற்கு இசை ஜி.வி. தான்.
No comments:
Post a Comment