ஜில்லாவில் பஞ்ச் டயலாக விடாத மதுரைக்கார விஜய்
சென்னை:
ஜில்லா படத்தில் பஞ்ச் வசனங்கள் இருக்கவே கூடாது என்பதில் விஜய் உறுதியாக உள்ளார். இதனால் ஜில்லா பஞ்ச் இல்லாத படமாக வெளியாகவிருக்கிறது. விஜய்யின் படங்களில் ஆங்காங்கே பஞ்ச் வசனங்கள் இருக்கும். இந்த வசனங்கள் அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்நிலையில் தலைவா என்ற ஒரு படம் வந்து விஜய்யை பாவம் பதற வைத்துவிட்டது. இதையடுத்து அவர் பஞ்ச் வசனங்கள், ஹீரோயிச வரிகள் கூட தனக்ககு வினையாக மாறிவிடுமோ என்று அஞ்சுகிறார். இதனால் ஜில்லா படத்தில் பஞ்ச் வசனமே வைக்கவில்லையாம். மேலும் ஹீரோவுக்கான சோலோ பாட்டில் கூட ஹீரோயிச வரிகள் இல்லையாம். தலைவா தான் படாதபாடுபட்டு ரிலீஸானது ஜில்லா படமாவது பிரச்சனை இன்றி ரிலீஸாக வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளார். முன்னதாக ஜில்லா படத்தில் எந்தவித அரசியல் பஞ்ச் வசனங்களும் இருக்கக் கூடாது என்று தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி இயக்குனர் நேசனிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment