Friday, December 13, 2013

சூர்யாவுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்த சனாகான்! - www.tnfinds.com - Best site in the world..


சூர்யாவுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்த சனாகான்!

சல்மான்கான் படத்துக்காக சூர்யாவுடன் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார் நடிகை சனா கான்.

 சிலம்பாட்டத்தில் அறிமுகமான சனாகான், இப்போது தனது முழு கவனத்தையும் பாலிவுட்டில் செலுத்தி வருகிறார்.

நடிகர் சல்மான்கானுடன் 'ஜெய் ஹோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வெளியானால் தனக்கு இந்தியில் பெரிய திருப்புமுனை கிடைக்கும் என அவர் நம்புகிறார்.

இதனால் இந்தப் படம் வெளியாவதற்குமுன் வேறு எந்தத் திரைப்படத்திற்கும் தேதிகள் அளிக்க அவர் விரும்பவில்லை. இந்நிலையில் நடிகர் சூர்யா-இயக்குனர் லிங்குசாமி கூட்டணியில் உருவாக இருக்கும் புதுப் படம் ஒன்றின் பாடல் காட்சிக்காக சனாகானை அணுகியபோது அவர் நடிக்க மறுத்துவிட்டார்.

 இதுகுறித்து சனாகான் கூறும்போது, "சல்மானுடன் நான் நடிக்கும் படம் விரைவில் வெளியாக உள்ளது. அது எனக்கு ஒரு பெரிய படமாக அமையும். இந்தப் படம் வெளியாகும் நேரத்தில் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அறிமுக நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டியிருப்பதால் புதிய படங்களுக்கு நேரம் ஒதுக்குவதென்பது கஷ்டமாக இருக்கக்கூடும். 

சூர்யாவுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தது நிஜம்தான். ஆனால் அவருடன் நடிக்கும் வாய்ப்பை மீண்டும் பெறுவேன்," என்றார்.





No comments: