Friday, December 13, 2013

பெங்களூரில் செல்போனில் வீடியோ எடுத்து தற்கொலை செய்து கொண்ட எம்.டெக். மாணவர் - www.tnfinds.com - Best site in the world...


பெங்களூரில் செல்போனில் வீடியோ எடுத்து தற்கொலை செய்து கொண்ட எம்.டெக். மாணவர்

பெங்களூர்: பெங்களூரில் எம்.டெக். மாணவர் ஒருவர் தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தான் தற்கொலை செய்ததை செல்போனில் பதிவு செய்துள்ளார்.

 பெங்களூரில் உள்ள பி.இ.எஸ்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் எம்.டெக். படித்து வந்தவர் ஹரிஷ்(26). அவர் தனது நண்பர் சேத்தன் என்பவருடன் விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்தார். அவர் சில பாடங்களில் தோல்வி அடைந்துள்ளார்.

 இதனால் மனமுடைந்த ஹரிஷ் கடந்த புதன்கிழமை மாலை 4 மணிக்கு விடுதியில் உள்ள தனது அறைக் கதவை பூட்டிவிட்டு பாத்ரூமுக்கு சென்றுள்ளார். அவர் தனது செல்போனில் வீடியோவை ஆன் செய்து அதை அங்குள்ள ஜன்னலில் வைத்துவிட்டு பக்கெட் மீது ஏறி நைலான் கயிறை வைத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு 9.45 மணிக்கு சேத்தன் வந்தபோது அறை கதவு பூட்டியிருந்தது. 

இதையடுத்து அவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஹரிஷ் தூக்கில் பிணமாகத் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு ஹரிஷின் உடல் ஷிமோகாவில் இருந்து வந்திருந்த அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

More Hot News Click Here....



No comments: