டெல்லி எம்.எல்.ஏக்களில் 43% குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்!
டெல்லி: எம்.எல்.ஏக்களில் 43% குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்!
டெல்லி: டெல்லி மாநில அரசியலில் எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களில் 43% குற்ற
வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று ஜனநாயக சீர்திருத்த அமைப்பு
தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் டெல்லி, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான்,
மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் குற்ற வழக்குகளில்
தொடர்புடைய எம்.எல்.ஏ.க்கள் குறித்து ஆய்வு ஒன்றை ஜனநாயக சீர்திருத்த
அமைப்பு மேற்கொண்டது.
இதில் டெல்லியில் மட்டும் 43% எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகள்
நிலுவையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏக்களில் 25% எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தில் எம்.எல்.ஏக்களில் 16% எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும் டெல்லி எம்.எல்.ஏக்களில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 69%க்கு குறையாமல் உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் எம்.எல்.ஏக்களில் 46% பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் எம்.எல்.ஏக்களில் 38% பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
No comments:
Post a Comment