பாய்லின் புயலால் 90 லட்சம் மக்கள் பாதிப்பு, 23 பேர் பலி, ரூ.2,400 கோடி பயிர்கள் சேதம்
கோபால்பூர்: பாய்லின் புயலால் ஒடிஷாவில் 90 லட்சம் மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர், லட்சக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும்
சுமார் ரூ.2,400 கோடி மதிப்புள்ள பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. புயலுக்கு
ஆந்திரா மற்றும் ஒடிஷாவில் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர்.
வங்கக் கடலில் உருவான பாய்லின் புயல் ஆந்திரா மற்றும் ஒடிஷா ஆகிய
மாநிலங்களை நேற்றிரவு தாக்கியது. ஒடிஷா மாநிலம் கோபால்பூரை மையமாகக் கொண்டு
220 கிமீ வேகம் வரை பாய்லின் புயல் வீசியது. இதில் கோபால்பூர் மற்றும்
கஞ்சம் ஆகிய மாவட்டங்கள் பெரும் சேதம் அடைந்துள்ளன.
பாய்லின் புயலால் 90 லட்சம் மக்கள் பாதிப்பு, 23 பேர் பலி, ரூ.2,400 கோடி
பயிர்கள் சேதம்
இந்த புயலால் ஒடிஷா மாநிலத்தில் சுமார் 2.34 லட்சம் வீடுகள் சேதம்
அடைந்துள்ளன. 8.73 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரவர் இருப்பிடங்களில்
இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர 5 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த ரூ.2,400 கோடி மதிப்புள்ள
பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. மேலும் 12 மாவட்டங்களில் உள்ள 14,514
கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாய்லின் புயலால் 90 லட்சம் மக்கள் பாதிப்பு, 23 பேர் பலி, ரூ.2,400 கோடி
பயிர்கள் சேதம்
ஆந்திரா மற்றும் ஒடிஷாவில் பாய்லின் புயலுக்கு இதுவரை 23 பேர்
பலியாகியுள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் புயல் மற்றும் கன மழையால்
வீடுகள் இடிந்ததில் இடிபாடுகளில் சிக்கி உயிர் இழந்தனர்.
முன்னெச்சரிக்கையாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டதால்
உயிர் சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயலின் தாக்கத்தால் மேற்கு வங்க கடற்பகுதி அருகே இரும்பு தாது
ஏற்றி வந்த பனாமா நாட்டு சரக்கு கப்பலான எம்.வி. பிங்கோ கடலில்
மூழ்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதில் இருந்த சிப்பந்திகள்
தப்பித்துவிட்டதாகத் தெரிகிறது.
பாய்லின் புயலால் 90 லட்சம் மக்கள் பாதிப்பு, 23 பேர் பலி, ரூ.2,400 கோடி
பயிர்கள் சேதம்
இதற்கிடையே பாய்லின் புயல் வலுவிழந்து வடக்கு சத்தீஸ்கர், ஒடிஷாவின் சில
பகுதிகள் மற்றும் ஜார்க்கண்டில் நிலை கொண்டுள்ளது. இதனால் மணிக்கு 45 முதல்
55 கிமீ வேகத்தில் காற்று வீசுகிறது.
No comments:
Post a Comment