காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளுக்கு ம.தி.மு.க. ஆதரவு கிடையாது: வைகோ
கோவில்பட்டி: காங்கிரஸ் கட்சிக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ
ஆதரவளிக்கும் கட்சிக்கு மதிமுக ஆதரவு கிடையாது என வைகோ தெரிவித்துள்ளார்.
மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணம் மேற்கொண்டுள்ள ம.தி.மு.க.
பொதுச்செயலாளர் வைகோ நேற்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில்
சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மதுவை ஒழிக்க வலியுறுத்தி சுமார் 1,200 கி.மீ. நடைப்பயணத்தை மேற்கொண்டேன்.
மக்களுக்காகவும், மக்கள் பிரச்சனைகளுக்காகவும் முல்லைத் தீவு, ஸ்டெர்லைட்
பிரச்சனை, இலங்கை தமிழர் பிரச்சனை, நதிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு
பிரச்சனைகளுக்காக மதிமுக போராடி வருகிறது.
தமிழர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு கேடு விளைவித்த காங்கிரஸ்
அரசைதேர்தலில் மக்கள் தூக்கி எறிய வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு
நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவளிக்கும் கட்சிக்கு மதிமுக ஆதரவு கிடையாது.
வருகின்ற தேர்தலில் வாக்களிக்கும் போது சிந்தித்து நேர்மையாக அரசியல்
நடத்திவரும் எங்களுக்கு வாக்களித்து ஆதரவு தாருங்கள். மக்களை நம்பி
போட்டியிடும் எங்களுக்கு நல்லதொரு பலத்தை தாருங்கள் என பேசினார்.
தொடர்ந்து மந்தித்தோப்பு, ஊத்துப்பட்டி, இடைசெவல், வில்லிசேரி,
சத்திரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மறுமலர்ச்சிப் பயணத்தை
மேற்கொண்டார்.
No comments:
Post a Comment