Wednesday, October 2, 2013

ராணுவ வீரராக ஆசைப்பட்டேன், ஆனால் கிரிக்கெட் வீரர் ஆகிவிட்டேன்: டோணி - www.tnfinds.com - Best Site in the World

ராணுவ வீரராக ஆசைப்பட்டேன், ஆனால் கிரிக்கெட் வீரர் ஆகிவிட்டேன்: டோணி

டெல்லி: ராணுவ வீரராக விரும்பிய தான் கிரிக்கெட் வீரராகிவிட்டதாக கேப்டன் டோணி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி ராஞ்சியில் உள்ள ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் ஒரு நாள் செலவிட்டார். அவர் ராணுவ வீரர்களுடன் பேசி மகிழ்ந்தார். ராணுவ வீரர்கள் டோணியிடம் பல கேள்விகள் கேட்டனர்.

 
நான் சிறுவயதில் இருந்தே ராணுவத்தில் சேர விரும்பினேன். ராணுவ வீரர்களை பார்க்கையில் நானும் ஒரு நாள் அப்படி ஆவேன் என்று நினைத்தேன் என டோணி தெரிவித்தார்.
 
ராணுவ சீருடை ஸ்பெஷல் ஆனது என்றார் டோணி.
நீங்கள் எப்படி கூலாக இருக்கிறீர்கள் என்று ராணுவ வீரர்கள் டோணியிடம் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், செய்தியாளர் கூட்டத்திற்கு முந்தைய நாள் ப்ரிட்ஜுக்குள் உட்கார்ந்து கொள்வேன், அதனால் தான் கூலாக இருக்கிறேன் என்றார்.

டோணி ராணுவ வீரர்களின் குடும்பத்துடன் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். மேலும் வீரர்களின் குழந்தைகளுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார்.

More news click here......

 


No comments: