ஓட்டுபோட விருப்பம் இல்லையா? ஏற்காடு தேர்தலில் தனி பட்டன்

சென்னை : வேட்பாளர்களுக்கு ஓட்டுபோட விருப்பம் இல்லை என்பதை தெரிவிக்க
ஏற்காடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலேயே தனி பட்டன் பொருத்தப்படும்
என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சுப்ரீம்கோர்ட்டில் பீப்பிள்ஸ்
யூனியன் என்ற தன்னார்வ நிறுவனம் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில்,
வேட்பாளர்களுக்கு ஓட்டுபோட விருப்பம் இல்லாவிட்டால் 49 ஓ என்ற பிரி
வின்கீழ், தங்களது வாக்குமுறையை செலுத்த வேண்டியுள்ளது. இது யாருக்கும்
ஓட்டுபோடவில்லை என்ற விவரத்தை வேட்பாளர்கள் தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம்
ஒரு தனி மனிதனின் சுதந்திரம் பறிபோகிறது.
இதனால் வாக்கு எந்திரத்தின் கீழ், தனி பட்டன் அமைக்க வேண்டும். அப்போதுதான் யாருக்கு வாக்களித்தோம் என்ற விவரம் யாருக்கும் தெரியாது. ரகசியம் காக்கப்படும் என்று கூறியிருந்தது. இந்த மனு மீதான விசாரணைக்குப் பிறகு, உச்ச நீதிமன்றமும், தேர்தலின்போது வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை தனி பட்டன் மூலம் தெரிவிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையமும், வேட்பாளர்களின் பெயர்களுக்கு கீழ் கடைசியாக வாக்களிக்க விருப்பம் இல்லை என்ற பட்டன் பொறுத்தப்படும் என்று அறிவித்தது. இந்த புதிய திட்டம் விரைவில் நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே, தமிழகத்தில் ஏற்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்காடு சட்டப்பேரவை தொகுதியில் தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் எடுத்து வருகிறார்.
இதனால் வாக்களிக்க விரும்பவில்லை என்ற பட்டன், இந்த தொகுதி தேர்தலின்போது நடைமுறைப்படுத்தப்படுமா என்று கேட்டபோது, ‘‘கண்டிப்பாக இந்த தேர்தலில் நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக பெரிய செலவாகாது. உழைப்பும் தேவைப்படாது. கூடுதலாக ஒரு பட்டன் மட்டுமே பொறுத்த வேண்டும். அதனால், ஏற்காடு இடைத்தேர்தலிலேயே இந்த திட்டம் அமல்படுத்தப்படும். ஆனால் வேட்பாளர்களை விட, அதிக ஓட்டுக்கள் பெற்றால் என்ன செய்வது என்பதை இப்போது கூற முடியாது. இது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். இது குறித்து விவாதித்துதான் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது’’ என்றார்.

No comments:
Post a Comment