மலேசியாவில் பயங்கரம்.. சிங்கப்பூருக்குக் காரில் போன 5 தமிழர்கள் விபத்தில் பலி
ரெம்பா, மலேசியா: மலேசியாவின் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் 5 இந்தியர்கள் பலியானார்கள். இவர்கள் சென்ற கார் 20 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. செனவாங்- பெடாஸ் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது தேவக்குமார், 28 வயது ரகுநாதன், 29 வயது சுரேஷ், 23 வயது ஆனந்த் மீனாட்சி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 27 வயது விஜயகார்த்திக் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இவர்கள் அனைவரும் டொயோட்டா ஆல்டிஸ் காரில், சிங்கப்பூருக்குப் போய்க் கொண்டிருந்தபோது விபத்து நேரிட்டது. வாகனம் மலைப் பகுதியில் போய்க் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விட்டது.
No comments:
Post a Comment