Sunday, December 8, 2013

இந்தியா மூட்டைப்பூச்சி நாடு; மன்மோகன்சிங் முட்டாள்: இலங்கை எம்.பியின் வாய்க்கொழுப்பு பேச்சு - www.tnfinds.com - Best site in the world..


இந்தியா மூட்டைப்பூச்சி நாடு; மன்மோகன்சிங் முட்டாள்: இலங்கை எம்.பியின் வாய்க்கொழுப்பு பேச்சு

கொழும்பு: "இந்தியா ஓரு மூட்டைப்பூச்சி நாடு என்றும், பிரதமர் மன்மோகன் சிங் வயதான முட்டாள்"என்றும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியபெரும வாய்கொழுப்பாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதாக உறுதியளித்த மன்மோகன் சிங் வராததை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் அவரை சூரியபெரும கடுமையாக விமர்சித்து பேசினார். இந்நிலையில், மன்மோகன் சிங் வயதான முட்டாள் என்றும், இந்தியா பெரிய நாடு அல்ல. அது மூட்டைப்பூச்சி என்றும் சூரியபெரும கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சூரியபெரும, மன்மோகன் சிங்கை விமர்சித்த போது அமைச்சர் ஜி.எல் பெரீஸ் உட்பட பல அமைச்சர்கள், எவ்வித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டவில்லை. அதேபோல இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மூளையற்றவர் என்று கருத்து கூறியுள்ள சூரிய பெரும, ஒபாமாவையும் சர்ச்சைக்குரிய கருத்தினால் பேசியுள்ளார்.


எனினும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் சூரியபெரும பேச்சை கண்டித்தனர். " நாட்டின் தலைவர்களை இவ்வாறு விமர்சிப்பது வெட்கப்பட வேண்டிய செயல்" என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். ஏற்கனவே நவநீதம்பிள்ளையை திருமணம் செய்ய விரும்புவதாக அமைச்சர் மேர்வின் சில்வா கூறியமையும் மற்றும் ஒரு அமைச்சர் நவநீதம்பிள்ளையை விடுதலைப்புலிகளின் பெண் போராளி என்று கூறியமையையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

More Hot News Click Here..



No comments: