தோஹாவில் பயங்கரம்: சர்க்கஸ் புலி தாக்கி சிறுவன் படுகாயம்
தோஹா: கத்தார் தலைநகர் தோஹாவில் சர்க்கஸ் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனை புலி தாக்கியதில் படுகாயமடைந்தான்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் பெயரை செய்தித்தாள்கள் வெளியிடவில்லை. ஞாயிறன்று மதியம், தனது தந்தையுடன் அந்த சிறுவன் சர்க்கஸ் பார்க்கச் சென்றிருந்தான். வித்தை காட்டிக் கொண்டிருந்த போது திடீரென்று பயிற்சியாளரின் கட்டுப் பாட்டினை மீறி புலி சிறுவனின் மீது பாய்ந்தது.
சர்க்கஸ் கூடாரத்தில் பலர் இருந்தும் புலியிடம் இருந்து சிறுவனை பாதுகாக்க முடியாமல் போனதுதான் பரிதாபம். சிறுவன் மேலே பாய்ந்த புலி பயங்கரமாக கடித்துக் குதறியது. இதனையடுத்து பதறிய பயிற்சியாளரும், அருகில் இருந்தவர்களும் புலியிடம் இருந்து சிறுவனை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
No comments:
Post a Comment