சென்சாரில் யுஏ சான்று... ரிவைசிங் கமிட்டிக்குப் போகிறது பிரியாணி!
சென்னை: தணிக்கைக் குழு யு ஏ சான்றிதழ் அளித்ததால் அதை எதிர்த்து ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்படுகிறது பிரியாணி திரைப்படம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி - ஹன்சிகா, பிரேம்ஜி நடித்துள்ள பிரியாணி திரைப்படம் இன்னும் இரு வாங்களில் வெளியாகவிருக்கிறது.
இந்த நிலையில் படத்தைத் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பினர். படத்தில் சில காட்சிகள் வயது வந்தோர் மட்டும் பார்க்கும்படி உள்ளதால், படத்துக்கு யு ஏ சான்றிதழ் அளித்துள்ளது சென்சார்.
தமிழக அரசின் கேளிக்கை வரியிலிருந்து விலக்குப் பெற க்ளீன் யு சான்று பெற்றிருக்க வேண்டும். ஏற்கெனவே அழகுராஜா படத்துக்கு வரிவிலக்குப் பெற்றதில் நிறைய சங்கடங்களைச் சந்தித்தது ஸ்டுடியோ க்ரீன்.
எனவே இந்த முறை அப்படி எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதால் கவனமாக, யு சான்று பெற முயற்சி செய்து வருகிறார்கள். படத்தை இப்போது ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி, தேவைப்பட்டால் சில காட்சிகளை நீக்கிவிட்டாவது யு சான்று பெறத் தீர்மானித்துள்ளார்களாம்.
No comments:
Post a Comment