இந்த வார ராசி பலன் (04.10.2013 முதல் 10.10.2013 வரை)
மேஷம்
பொது
இந்த வாரம் உங்கள் ராசிக்கு, பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியாகிய சூரியன்,
சுபஸ்தான அதிபதி சந்திரன் நற்பலன் வழங்குகின்றனர். சுக்கிரன் வார பிற்பகுதி
நாட்களில் பணவரவு, நண்பரின் உதவி கிடைக்க உதவுகிறார். உங்களின் தனித்
திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.
பெண்கள்
புத்திரர், உங்களின் சொல்கேட்டு நடந்து கொள்வர். உடல் நலம் ஆரோக்கியம்
பெறும். இல்லறத்துணை அன்பு, பாசத்துடன் நடந்து, குடும்ப ஒற்றுமையை
பாதுகாப்பார். குடும்ப பெண்கள் செலவுகளில், சிக்கன நடைமுறை பின்பற்றுவர்.
வேலை பார்ப்பவர்கள்
பணியாளர், கூடுதல் வேலை வாய்ப்பை பயன்படுத்துவதால், குடும்பத் தேவைக்கான
பணவரவு அதிகரிக்கும். பணிபுரிவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில்,
வியாபாரத்தில் வளர்ச்சி பெற, அக்கறையுடன் செயல்படுவீர்கள்.
ரிஷபம்
பொது
இனிய எண்ணங்களால், மனதில் உற்சாகம் அதிகரிக்கும் வசீகரமான பேச்சினால்,
புதியவர்களின் அன்பு, நட்பு பெறுவீர்கள். பணவரவு அதிகம் பெற உருவாகிற
வாய்ப்பை தவறாமல் பயன்படுத்துவீர்கள்.
பெண்கள்
குடும்ப பெண்கள், கணவரின் கருத்துக்களில் உள்ள நியாயம் உணர்ந்து
செயல்படுவது ஒற்றுமையை பாதுகாக்க உதவும். இல்லறத் துணையின் மனதில்
நம்பிக்கை வளர்க்கும் விதத்தில் பேசுவது நல்லது. தம்பி, தங்கையின்
விருப்பம் நிறைவேற உதவுவீர்கள். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித்
தருவீர்கள்.
வேலை பார்ப்பவர்கள்
தொழில், வளர்ச்சி சிறப்பாக அமைந்து, லாபவிகிதம் அதிகரிக்கும். பணியாளர்கள்
குறித்த காலத்தில், பணி இலக்கு நிறைவேற்றுவர். சலுகைப் பயன்களும் எளிதாக
கிடைக்கும். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை குறைப்பதால் மட்டுமே, பப்பதில்
ஆர்வம் வளரும்.
மிதுனம்
பொது
உங்கள் மனம் வருந்துகிற வகையில், சிலர் அவமதித்து பேசுவர். அவர்களிடம்
விலகுவதால் நேரமும், மனஅமைதியையும் பாதுகாக்கலாம். குடும்பத்தின்
அத்தியாவசிய செலவுக்கு மட்டும் முன்னுரிமை தருவது நல்லது.
பெண்களுக்கு
குடும்ப பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவர். இல்லறத்துணையின் ஆறுதல்
வார்த்தை மனதில் நம்பிக்கை வளர்க்கும். சீரான ஓய்வு உடல் நலம்
பாதுகாக்கும். புத்திரரின் தவறுகளை கண்பது, சரி செய்வதில் நிதான அணுகுமுறை
நற்பலன் பெற உதவும்.
வேலை பார்ப்பவர்கள்
தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத் தன்மைகளை, அக்கறையுடன் பாதுகாக்க
வேண்டும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும், சேமிப்பு பணம் அத்தியாவசியத்
செலவுக்கு பயன்படும்.
கடகம்
பொது
கருணை மனதுடன் செயல்பட்டு மனதில் நிம்மதியும், சமூகத்தில், உயரிய
அந்தஸ்தும் பெறுவீர்கள். பணவரவு சராசரி அளவில் கிடைக்கும். வீடு,
வாகனத்தில் கூடுதல் வதிபெற தேவையான பணி நிறைவேற்றுவீர்கள்.
பெண்கள்
பெண்கள் தாய்வீட்டு சீர்முறை கிடைத்து, சந்தோஷம் அடைவர். புத்திரரின்
செயல்களை, கண்காணித்து வழி நடத்துவது நல்லது. இல்லறத்துணை குடும்ப நலன்
சிறக்க கூடுதல் தியாக உணர்வுடன் நடந்து கொள்வர்.
வேலை பார்ப்பவர்கள்
தொழில், வியாபாரம் சார்ந்த வகையில் எதிர்பார்த்த அரசு உதவி பெற அனுகூலம்
உண்டு. பணியாளர்கள் கூடுதல் தொழில் நுட்பம் பயன்படுத்தி முன்னேற்றம்
பெறுவர். எதிரியின் எண்ணங்களை உணர்ந்து விலகுவீர்கள்.
சிம்மம்
பொது
வாழ்வில் கூடுதல் வளம் பெற, தேவையான நன்மை வந்து சேரும். உறவினர்களிடம்,
உங்கள் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு
நடைமுறை பின்பற்ற வேண்டும்.
பெண்கள்
குடும்ப பெண்கள், உறவினர்களை நன்கு உபசரித்து, கணவரின் மதிப்பை
அதிகரிப்பர். புத்திரர், உங்களிடம் புதிய கருத்துகளை பகிர்ந்து கொள்வார்.
இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார்.
வேலை பார்ப்பவர்கள்
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற, உங்களின் கடின உழைப்பும் இஷ்ட
தெய்வ அருளும் துணை நிற்கும். உபரி பணவரவு கிடைக்கும். எதிரியால் உருவாகிற
கெடு செயல் பலமிழந்து போகும்.
கன்னி
பொது
பிறரிடம் பேசுவதில் கண்டிப்பு குணமும், வசீகர வார்த்தைகளும் சம அளவில்
கலந்திருக்கும். மனதில் உருவாகிற சஞ்சலங்களை, பழைய நன்மைகளை நினைத்துப்
பார்த்து குறைத்துக் கொள்வீர்கள். வீடு, வாகனத்தில் அறிமுகம் இல்லாத
எவருக்கும் இடம் தர வேண்டாம்.
பெண்கள்
பெண்கள் குடும்பத்தின் வாழ்வு முறையை சீராக்குவதில் அக்கறை கொள்வர்.
இல்லறத்துணை குடும்ப நலன் சிறக்க, அன்பாக நடந்து கொள்வார். உடல்நலத்திற்கு
ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம்.
வேலை பார்ப்பவர்கள்
தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத் தன்மைகளை கூடுதல் அக்கறையுடன்
பாதுகாக்கவும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்ட திட்டம் மதித்து
நடப்பதால், ஒழுங்கு நடவக்கை வராமல் தவிர்க்கலாம்.
துலாம்
பொது
பிறரது ஆடம்பர செயல் நடைமுறைகளை பார்த்து, தாமும் அவ்வாறு நடந்து கொள்ள
எண்ணம் உருவாகலாம். இதனால் தேவையற்ற பணச்செலவு, குடும்ப உறுப்பினர்களின்
அதிருப்தியை எதிர்கொள்ள நேரிடலாம். கவனம் தேவை. வாகனத்தில் கூடுதல்
பாதுகாப்பு அவசியம்.
பெண்கள்
குடும்ப பெண்கள், சிக்கன பணச்செலவில் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர்.
இல்லறத்துணை ஒற்றுமை குணத்துடன் உதவுவார். புத்திரர் பிடிவாத குணத்துடன்
நடந்து, உங்களின் இதமான அணுகுமுறையால், மனதில் மாற்றம் பெறுவர்.
வேலை பார்ப்பவர்கள்
தொழில், வியாபாரத்தில் சராசரி உற்பத்தி, விற்பனை இருக்கும்.
அரசியல்வாதிகள், விரும்பிய பதவி பெற நல்யோகம் உண்டு. சீரான ஓய்வு உடல்நலம்
பாதுகாக்க உதவும்.
விருச்சிகம்
பொது
வாழ்வில் எதிர்மறையாக உருவான சூழ்நிலைகளை சரி செய்வதில் அக்கறை
கொள்வீர்கள். வீடு, வாகனத்தில் பயன்பாட்டு வசதி சீரான அளவில் கிடைக்கும்.
பெண்கள்
பெண்கள், குடும்பத்தின் எதிர்கால நலன் சிறக்க, கணவரிடம் சிறந்த ஆலோசனை
சொல்வர். புத்திரரின் மனதில் உருவாகிற இனம் புரியாத சஞ்சலம் விலக
அறிவுப்பூர்வமான கருத்துகளை சொல்வீர்கள். இல்லறத்துணை விரும்பிய பொருள்
வாங்கித் தருவீர்கள்.
வேலை பார்ப்பவர்கள்
தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து லாப விகிதம் கூடும். பணியாளர்கள்
கூடுதல் வேலைவாய்ப்பை மனமுவந்து ஏற்றுக் கொள்வர். உடலில் பணி தொந்தரவு
குறையும்.
தனுசு
பொது
சூழ்நிலை உணர்ந்து பிறரிடம் பேசுவீர்கள். சமூகப் பணியில் ஆர்வம் வளரும்.
மரியாதை, புகழ் தாமாக தேவரும். புதிய வாகனம் வாங்க நல்யோகம் உண்டு.
புத்திரரின் உடல்நலம் பலம் பெற, சத்து நிறைந்த உணவு தருவீர்கள்.
பெண்கள்
பெண்கள், குடும்பத்தின் பணவசதிக்கு ஏற்ப, புத்தாடை அணிகலன் வாங்குவர்.
இல்லறத்துணை உங்களின் நல்ல குணங்களை மனதார வாழ்த்துவர்.
வேலை பார்ப்பவர்கள்
தொழில், வியாபாரத்தில் தாராள பணச் செலவில், அபிவிருத்தி பணி
மேற்கொள்வீர்கள். பணியாளர்களுக்கு, சலுகைப் பயன் எளிதாக வந்து செரும்.
எதிரியால் உருவாகிற தொந்தரவு விலகும்.
மகரம்
பொது
எவரிடமும் அளவுடன் பேசுவது, நேரம், மனஅமைதியை பாதுகாக்கும். தம்பி, தங்கை
அதிருப்தி மனப்பாங்குடன் உங்களிடம் நடந்து கொள்வர். தாயின் உடல்நலத்திற்கு,
மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.
பெண்கள்
பெண்கள், குடும்பச் செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படுத்துவர். புத்திரரை
கண்பதில், நிதானம் வேண்டும். நிர்ப்பந்த பணக்கடனில் ஒரு பகுதி
செலுத்துவீர்கள். இல்லறத்துணையிடம், உறவினர் குடும்ப விவகாரம் பற்றி
பேசவேண்டாம்.
வேலை பார்ப்பவர்கள்
தொழில், வியாபாரத்தில் கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராகும். இயந்திர
தொழிற்சாலை பணியாளர், பாதுகாப்பு முறை தவறாமல் பின்பற்றவும்.
கும்பம்
பொது
ஆன்மிக நம்பிக்கைகளை பின்பற்றி, கடந்த நாட்களில் பெற்ற நன்மைகளை நினைத்து,
பெருமிதம் கொள்வீர்கள். உடன் பிறந்தவர் கூடுதல் அன்பு பாராட்டுவர். வீடு,
வாகனத்தில் பயன்பாட்டு வசதி சீராக கிடைக்கும்.
பெண்கள்
குடும்ப பெண்கள், கணவரின் நல்அன்பு, தாராள பணவசதி கிடைத்து, சந்தோஷ வாழ்வு
நடத்துவர். புத்திரரின் அறிவுத்திறன் வளர்ந்து படிப்பு,
வேலையில்முன்னேற்றம் உருவாகும்.
வேலை பார்ப்பவர்கள்
தொழில், வியாபாரம் செழித்து, உபரி பணவரவை பெற்றுத் தரும். பணியாளர்கள்
சிறப்பாக செயல்பட்டு, நிர்வாகத்திடம் நற்பெயர், வெகுமதி பெறுவர். எதிரி
வியந்து விலகுகிற புதிய சூழ்நிலை உருவாகும்.
மீனம்
பொது
திட்டமிட்ட காலத்தில் பணி நிறைவேற்றுவதில், தாமதம் உருவாகலாம். தன்னுடன்
பழகுபவர்களின் மனப்பாங்கு உணர்ந்து பேசுவது நல்லது. பணவரவை விட, குடும்பத்
தேவைகளுக்கான பணச்செலவு அதிகரிக்கும். வாகனத்தில், மிதவேகம் பின்பற்றவும்.
பெண்கள்
பெண்கள் சேமிப்பு பணத்தை, குடும்ப செலவுக்கு பயன்படுத்துவர். புத்திரரின்
உடல்நலம் சீர்பெற, சிறு அளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.
இல்லறத்துணை குடும்ப நன்மைகளை மனதில் கொண்டு, தியாக மனதுடன் நடந்து
கொள்வார்.
வேலை பார்ப்பவர்கள்
தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கை அடைய, அதிகம் பணிபுரிவது அவசியம்.
காலக்கெடு தவறிய உணவு வகை உண்ண வேண்டாம்.
No comments:
Post a Comment