காதல் முறிவிற்கு பின் செய்யக்கூடாத 10 விஷயங்கள்!!!
காதல் என்பது இந்த உலகில் பரவி கிடக்கிறது. காதல் மற்றும் கோவில்
இல்லாத ஊரே இவ்வுலகில் இருக்க முடியாது. ஆனால் காதல் என்று ஒன்று
இருந்தால், காதல் முறிவும் இருக்கத் தான் செய்யும். ஆமாம், காதலித்த
எல்லோரும் ஒன்று சேர்கிறார்களா என்ன?
காதல் முறிவு என்பது உங்கள் வாழ்க்கையை பாழாக்கும் ஒரு காலமாகும். இல்லை,
அது உங்கள் கண்களை திறக்கச் செய்யும் ஒரு காலமாகும். என்ன, ஆச்சரியமாக
இருக்கிறதா? ஆம் ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்து தான் காதல் முறிவு
நேர்மறையாக அல்லது எதிர்மறையாக பார்க்கப்படுகிறது. இந்த காதல் முறிவு
ஏற்பட்ட பிறகு, பொதுவாக அனைவரும் செய்யும் முக்கியமான தவறுகள் சில உள்ளன.
அது அவர்களின் வழியை நீட்டிக்கவே செய்யும். அதனால் காதல் முறிவு ஏற்பட்டால்
நாங்கள் கூறும் சில அறிவுரைகளை பின்பற்றினால், உங்கள் வாழ்வில் நிம்மதி
குடியேறும். சரி, காதல் முறிவுக்கு பின் செய்யக்கூடாத சில விஷயங்கள்
பட்டியலிடப்பட்டுள்ளன.
10.ஆம், காதல் முறிவால் தேங்கி விடாமல் வாழ்க்கையை தொடர ஜாலியான
பேர்வழிகளை சந்தியுங்கள். ஆனால் பழைய உறவை மறக்க வேண்டி மனம் போன போக்கில்
டேட்டிங் செல்கிறீர்களா? அப்படியானால் அது கண்டிப்பாக கூடாது. பழைய உறவை
பற்றி நினைக்க கூட செய்யாதீர்கள். அது இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தி
உறவுகளில் பல சிக்கல்களை ஏற்படுத்தி விடும்.
1.அவளை பற்றி நினைப்பது, அவள் சொன்னதையெல்லாம் நினைவு கூறுவது, இருவரும்
சேர்ந்து செய்தது மற்றும் இருவர் சம்பந்தப்பட்ட விசேஷ தருணங்கள் என
இவையனைத்தையும் நினைப்பது தவறான செயலாகும். இதனால் அது மன அழுத்தத்தை
அதிகரிக்கவே செய்யும். மாறாக நிகழ் காலத்தில் வாழ்ந்திடுங்கள்.
இல்லையென்றால் வருங்காலத்தை பற்றி சிந்தியுங்கள்.
2.உங்கள் காதலியின் தொலைபேசி எண் உங்களிடம் இருக்கும். அதனால் முறிவு
ஏற்பட்டாலும் கூட, அவளை தொடர்பு கொள்ள உங்களை தூண்டும். அப்படி ஆகாமல்
தடுக்க அவள் தொலைபேசி எண்ணை முதலில் உங்கள் தொலைபேசியில் இருந்து அழித்து
விடுங்கள்.
3.தனிமையில் சில நேரம் கழிப்பதும் நல்ல யோசனை தான். நடந்த தவறை பற்றி
சிந்திக்கவும், உங்களை நீங்களே புரிந்து கொள்ளவும் இந்த தனிமை உங்களுக்கு
கை கொடுக்கும். இருப்பினும் நீண்ட நேரம் தனிமையில் இருப்பது ஆபத்து. அது
உங்களை மிகவும் தனிமைப்படுத்திவிடும். அதனால் நண்பர்கள் மற்றும் குடும்ப
உறுப்பினர்களை சந்தித்து நேரத்தை செலவிடுங்கள். அதை விட மருந்து வேறு ஏது?
4.காதல் முறிவு ஏற்படும் போது, அதனை மறக்க அதிகப்படியான மது அருந்துவது
என்பது ஆபத்தில் முடியும். ஆகவே இவ்வகை தீமைகளில் இருந்து ஒதுங்கியே
இருங்கள். இவ்வகை அறிகுறிகள் தெரிந்தால், அந்த பழக்கத்திற்குள் ஆழமாக
செல்லாதீர்கள்.
5.காதல் முறிவு ஏற்பட்ட பின் மற்றொரு பெண்ணின் இனிமையான பேச்சுக்கும்,
மயக்கும் செயலுக்கும், அவர்களின் மீது காதல் பிறக்கலாம். ஆனால் இது
செய்யக்கூடாத ஒன்றாகும். மீண்டும் ஒரு முறை காதலில் விழுவது, முக்கியமாக
காதல் முறிவு ஏற்பட்ட உடனேயே என்பது செய்யக்கூடாத பெரும் தவறாகும்.
முறிவினால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப மட்டுமே செய்கிறாள் உங்களின் புதிய
காதலி.
6.காதல் முறிவு ஏற்பட்ட காரணத்திற்காக, மனதை ஆற்ற உடனே வேறொரு பெண்ணிடம்
உடலுறவு கொள்ளக்கூடாது. காதல் முறிவுக்கு பின் உடல் உறவு கொள்ள துடிப்பதை
தவிர்க்கவும். இது உங்கள் மனம் இயல்பு நிலைக்கு மாற அவகாசம் அளிக்கும்.
உங்களுக்கான சரியான பெண்ணை பார்க்கும் போது, மனம் அமைதியுடன் இருக்கும்.
7.காதல் முறிவால் எப்போதும் தனிமையில் நேரத்தை கழித்தால், அது
பிரச்சனையை தான் உண்டாக்கும். அவளை நினைப்பது மட்டுமல்லாது, அவளை கூப்பிட
முயற்சி செய்வீர்கள், அவள் நினைவை தரும் பொருட்களைப் பார்ப்பீர்கள்; இப்படி
சொல்லிக் கொண்டே போகலாம். அதனால் தனிமையை தவிர்க்கவும்.
8.அவள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பதை அறிய, அவளின்
பேஸ்புக் பக்கத்திற்கு அடிக்கடி செல்வதும் பெரிய தவறாகும். அவள் சாதாரண
முறையில் மற்ற ஆண்களுடன் உரையாடலில் ஈடுபட்டிருந்தால் கூட, அது உங்களுக்கு
கஷ்டத்தை ஏற்படுத்தும்.
9.ஆம், நீங்கள் காதலித்து கொண்டிருந்த போது, உங்கள் காதலியின் நெருங்கிய
தோழி தான் உங்கள் இருவரின் நம்பிக்கைக்குரியவராக இருந்திருப்பார். ஆனால்
இன்று அவள் உங்கள் காதலிக்கு மட்டுமே நெருங்கிய தோழியாக இருப்பாள். அவளிடம்
இருந்தும் விலகியே இருங்கள்.
More News Click Here.....
More News Click Here.....
No comments:
Post a Comment