வாலாஜாபாத்தில்
ரூ.13 லட்சத்தில் கட்டி பயனற்று கிடக்கும் வணிக வளாக கடைகள்
டாஸ்மாக் கடையால் வாடகைக்கு எடுக்க வியாபாரிகள் தயக்கம்
வாலாஜாபாத், அக்.7-வாலாஜாபாத்தில்
ரூ.13 லட்சம் மதிப்பில் கட்டி எந்தவித பயனும் இல்லாமல் வணிக வளாக கடைகள்
மூடிக்கிடக்கின்றன. அருகில் டாஸ்மாக் கடை இருப்பதால் வாடகைக்கு எடுக்க
வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.வணிக வளாகம்காஞ்சீபுரம்
மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையம் அருகில் சந்தை
மேடு பகுதியில் கடந்த 2010-11ம் ஆண்டில் அண்ணா மறுமலர்ச்சித்
திட்டத்தின்கீழ் ரூ.13 லட்சத்தில் 8 கடைகள் கொண்ட வணிக வளாகம்
கட்டப்பட்டது. அதன் அருகிலேயே ஆரம்ப சுகாதார நிலையம், அரசினர்
மேல்நிலைப்பள்ளி, சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.புதிதாக
கட்டப்பட்ட வணிக வளாகத்தில் உள்ள 8 கடைகளின் மூலம் வாலாஜாபாத்
பேரூராட்சிக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும். அதன்மூலம் பேரூராட்சியின்
வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என உத்தேசிக்கப்பட்டு இருந்தது. பயனற்று கிடக்கிறதுஆனால்,
வணிக வளாகம் கட்டியது முதல் கடைகள் அனைத்தும் திறக்கப்படாமல் பயனற்ற
நிலையில் மூடியே கிடக்கின்றன. இதன் மூலம் 2 ஆண்டுகளுக்கு மேலாக கடைகளின்
மூலம் கிடைக்க வேண்டிய வருமானம் பேரூராட்சிக்கு கிடைக்கவில்லை. இதற்கு
முக்கிய காரணம் இந்த வணிக வளாகத்தின் அருகிலேயே அமைந்து உள்ள டாஸ்மாக் கடை
என்று கூறப்படுகிறது. டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் இந்த வணிக வளாக
கடைகளின் முன்பு அமர்ந்து மது அருந்தி விட்டு பாட்டில்கள், டம்ளர்களை
அங்கேயே வீசி எறிந்து விட்டு செல்கின்றனர். கடையை அகற்றவேண்டும்வணிக
வளாக கடையை வாடகைக்கு எடுக்க வரும் வியாபாரிகளும் மது அருந்துபவர்களால்
தங்களுக்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி தயக்கம் காட்டுகின்றனர்.
அதையும் மீறி ஒரு சில கடைகளை திறந்த வியாபாரிகளும், குடிமகன்களால் ஏற்பட்ட
பிரச்சினையால் கடையை மூடிவிட்டு சென்று விட்டனர்.மேலும் ஆரம்ப
சுகாதார நிலையம், சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களும்,
பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் டாஸ்மாக் கடையால் பெரும்
அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே வாலாஜாபாத் பேரூராட்சி வணிக வளாக
கடைகளின் வாடகை வருமானத்தை பெறுவதற்கும், பொதுமக்கள் அவதிப்படுவதை
தடுக்கவும் இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றி வேறு இடத்துக்கு
மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என
பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
No comments:
Post a Comment