கால்நடை பராமரிப்பு துறைக்கு ரூ.25.88 கோடியில் புதிய திட்டம் : ஜெயலலிதா ஒப்புதல்
சென்னை: கால்நடை பராமரிப்பு துறைக்கு ரூ.25.88 கோடியில் புதிய
திட்டங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார். இதுதொடர்பாக
தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை: கறவை பசுக்களின் பால் உற்பத்தி திறனை
அதிகரிக்க சிறந்த வம்சா வழி மரபணுக்கள் கொண்ட காளைகளில் இருந்து உயர்தர
உறைவிந்து உற்பத்தியை உறுதி செய்வதற்காக உதகமண்டலத்தில் உறைவிந்து உற்பத்தி
நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையத்தின் உறைவிந்து உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், வலுப்படுத்தவதற்கு ஏற்ற வகையிலும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.6.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கால்நடைகளுக்கு போதிய உலர் தீவனம் வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
உலர் தீவனத்தை விவசாயிகளுக்கு வழங்க 250 மானிய உலர் தீவன விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். ஒரு விற்பனை நிலையத்திற்கு ரூ.5 லட்சம் வீதம் ரூ.12.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கிராமங்களில் உள்ள 100 கால்நடை கிளை நிலையங்கள், நவீன வசதிகளுடன் கூடிய கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்படுகிறது.
இதற்காக ரூ.6.93 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறைக்கென மொத்தம் ரூ.25.88 கோடியில் புதிய திட்டங்களுக்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment