சொத்துக் குவிப்பு வழக்கு
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராக உத்தரவு
பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4
பேரும் வரும் 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூர் சிறப்பு
நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து
குவிப்பு வழக்கு, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு
வருகிறது. இன்று, இந்த வழக்கு நீதிபதி முடிகவுடா(பொறுப்பு) முன்னிலையில்
விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே அரசு தரப்பில் இந்த வழக்கில் ஆஜரான பவானிசிங்
தொடர்ந்து ஆஜராகி வாதாட உச்சநீதிமன்றம் சமீபத்தில் அனுமதி வழங்கியது.
அந்த உத்தரவு நகலை நீதிபதியிடம் பவானிசிங் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கில் அரசு தரப்பில் தொடர்ந்து பவானி சிங் ஆஜராக அனுமதி அளித்தார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேரும் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி தனித்தனியாக அவர்களது வக்கீல்கள் நீதிபதியிடம் மனு அளித்தனர்.
அதை பெற்றுக்கொண்ட நீதிபதி, ‘ஆஜராகாமல் இருக்க என்ன காரணம்’ என்று கேட்டார். ‘இந்த வழக்கு முடியும் நிலையில் உள்ளதால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டியதில்லை‘ என்று வக்கீல்கள் பதில் அளித்தனர். ‘குற்றவாளிகள் ஆஜராகக் கூடாது என்று சட்டத்தில் விலக்கு அளிக்கப்படவில்லை.
ஜெயலலிதா உள்பட 4 பேரும் வரும் 30ம் தேதி விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜராக வேண்டும். அரசு தரப்பில் இதற்கு ஆட்சேபம் உண்டா’ என்று பவானி சிங்கிடம் நீதிபதி கேட்டார். ‘ஆட்சேபனை எதுவும் இல்லை‘ என்றார். ஏற்கனவே இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி பாலகிருஷ்ணாவே மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, ‘தற்போது வரை இந்த வழக்கை விசாரணை நடத்த எனக்குதான் கர்நாடகா உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்கிறது. எனவே, நான் தான் விசாரணை செய்வேன்’ என்றார். இதன்பின், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 9 மாதமாக நீதிபதி பாலகிருஷ்ணா இந்த வழக்கில் விசாரணை நடத்தி வந்தார்.
அப்போது குற்றவாளிகளுக்கு ஆதரவாக அவர் எப்படியெல்லாம் செயல்பட்டார் என்று குறிப்பிட்டு 40 பக்க புகார் மனுவை திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பில் கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி உள்பட 30 நீதிபதிகளிடம் அளித்துள்ளனர். அம்மனுவின் நகல் கர்நாடக அரசுக்கும் கொடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment