அக்டோபர் 31ம் தேதியே 'ஆரம்பம்'!

'ஆரம்பம்' படத்தினை அக்டோபர் 31ம் தேதியே வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
அஜித் நடித்த 'ஆரம்பம்', கார்த்தி நடித்த 'ஆல் இன் ஆல் அழகுராஜா', விஷால்
நடித்த 'பாண்டியநாடு' ஆகிய படங்களுக்கு இடையே தியேட்டர் ஒப்பந்தத்தில்
கடும் போட்டியே நடைபெற்று வருகிறது.
அஜித் படம் என்பதால் ஒப்பனிங் அட்டகாசமாக இருக்கும் என்று 'ஆரம்பம்' படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்திருக்கின்றன.
தமிழ்நாட்டின் பெரிய விநியோக உரிமை ஏரியாவான NSC ( North Arcot, South
Arcot, Chengalpet ) ஏரியாவுக்கு கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் இந்த
ஏரியாவின் உரிமையை ஐங்கரன் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கி
தியேட்டர் ஒப்பந்தங்களைத் தொடங்கிவிட்டது.
படத்தின் அனைத்தும் பணிகளும் முடிந்து, தற்போது வெளிநாட்டிற்கு
அனுப்பப்படும் பிரிண்ட்டுகளுக்கு சப்-டைட்டில் போடும் பணி படுஜோராக
நடைபெற்று வருகிறது.
அனைத்து பணிகளுமே முடிந்துவிட்டதால், படத்தினை சீக்கிரம் சென்சார்
செய்துவிட்டு, இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்
ஏ.எம்.ரத்னம்.
'ஆல் இன் ஆல் அழகுராஜா' நவம்பர் 1ம் தேதியும், 'பாண்டியநாடு' தீபாவளி தினத்தன்றும் ( நவம்பர் 2 ) வெளியாகும் என்கிறது கோலிவுட்.
அஜித் ரசிகர்களை நம்பி, தீபாவளிக் கொண்டாட்ட ஆரம்பம் முதலே, ஆரம்பிக்கிறது 'ஆரம்பம்'.
No comments:
Post a Comment