40% 'சிட்டி'சன்கள் இன்னும் யாருக்கு ஓட்டுப் போடுவது என்றே முடிவு செய்யவில்லையாம்!
டெல்லி: நகர்ப்புற இந்தியாவில் 40 சதவீத வாக்காளர்கள் இன்னும்
யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்யவில்லை என்று ஒரு சர்வே
கூறியுள்ளது.
கூகுள் இந்தியா இந்த சர்வேயை நடத்தியுள்ளது.
மேலும் இந்த சர்வேயில் நரேந்திர மோடியைத்தான் அதிகம் பேர் கூகுள் சர்ச்சில்
தேடியுள்ளதாகவும் இந்த சர்வே கூறுகிறது.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள நிலையில் கூகுள் இந்தியா இந்த சர்வேயை நடத்தியுள்ளது.
இந்திய அரசியல்வாதிகளிலேயே நரேந்திர மோடியைத்தான் அதிகம் பேர் கடந்த 6 மாதங்களில் கூகுள் சர்ச்சில் தேடியுள்ளனராம்.
இதில் 2வது இடத்தில் ராகுல் காந்தியும், தொடர்ந்து சோனியா காந்தி, மன்மோகன் சிங், அரவிந்த் கேஜ்ரி்வால் ஆகியோரும் வருகின்றனர்.
உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் இந்த வரிசையில் 6வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை கூகுள்வாசகர்கள் அதிக அளவில் தேடிய
அரசியல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. 2வது இடம் காங்கிரஸுக்கும், 3வது
இடம் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கும் கிடைத்துள்ளது.
அதிகம் தேடப்பட்ட 10 அரசியல் தலைவர்களில் நான்கு பேர் காங்கிரஸைச்
சேர்ந்தவர்கள் என்றும் 2 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூகுள்
தெரிவித்துள்ளது.
நகர்ப்புற இந்திய வாக்காளர்களில் 42 சதவீதம் பேர் யாருக்கு ஓட்டுப்
போடுவது என்று இன்னும் முடிவு செய்யவில்லையாம். அதேசமயம், அரசியல்
கட்சிகளைப் போலவே வேட்பாளர்களையும் முக்கியமாக பரிசீலிப்போம் என்று இவர்கள்
கருத்து தெரிவித்துள்ளனராம்.
பிரதமர் வேட்பாளர் யார் என்பது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தை 11 சதவீதம் பேர் மட்டுமே சொல்லியுள்ளனர்.
108 தொகுதிகளைச் சேர்ந்த 7000 இன்டர்நெட் பயனாளர்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது.
நகர்ப்புற வாக்காளர்கள், தங்களது தொகுதி வேட்பாளர்கள் குறித்த
விவரங்கள் இன்டர்நெட்டில் இடம் பெற வேண்டும் என்று விருப்பம்
தெரிவித்துள்ளனராம்.
No comments:
Post a Comment