''என்னய்யா தொண்டர்கள் இவர்கள்.. ஒரு மது பாட்டிலைக் கூடக் காணோம்''
திருச்சி: திருச்சியில் நடந்த நரேந்திர மோடி கூட்டத்தின்போது அதில்
கலந்து கொண்ட தொண்டர்களால் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனராம்- குப்பை
சேகரிப்போர்.... ஏன் என்று தெரியுமா... கூட்டம் நடந்து முடிந்த பிறகு நிறைய
மது பாட்டில்கள் கிடைக்கும், அதை சேகரித்து நல்ல காசு பார்க்கலாம் என்ற
எண்ணத்தில் இருந்த அவர்களுக்கு ஒரு மது பாட்டில் கூட கிடைக்காமல்
போனதாலாம்....
திருச்சி கூட்டத்தில் கலந்து கொண்ட யாருமே மது அருந்தவில்லையாம். மேலும்
மது பாட்டில்களும் அந்த மைதானத்தில் எதுவுமே கிடைக்கவில்லையாம்.
இப்படி ஒரு மது பாட்டில் கூட கிடைக்காமல் போனதால்தான் குப்பை சேகரிப்போர்
பெரும் ஏமாற்றமடைந்தனராம், ஆச்சரியமும் அடைந்தனராம்- இப்படியும் ஒரு
அரசியல் கூட்டமா என்று.
பொதுவாகவே, அரசியல் கட்சிகள் என்றாலே, அக்கட்சிகளின் தொண்டர்கள்
என்றாலே மது விருந்து, கோழிக்கறி விருந்து என்பது பிரிக்க முடியாத விஷயமாகி
விட்டது.
ஏதாவது பொதுக் கூட்டமா, மாநில மாநாடா உடனே சரக்கு
பாட்டில்களுக்குத்தான் பல கட்சிகளின் தொண்டர்கள் ஆர்டர் செய்வார்கள்.
அதேபோல கோழிக்கறி, ஆட்டுக்கறி விருந்தும், பிரியாணியும் தடபுடலாக
இருக்கும்.
மேலும் இதுபோன்ற கட்சிக் கூட்டங்களுக்கு வேன்கள், பஸ்கள், லாரிகளில்
ஆட்களைத் திரட்டிக் கொண்டு வருவார்கள். அவர்களுக்கு கையில் பணமும்,
சாப்பிடி பிரியாணியும், சரக்கும் தருவது நமது அரசியல் கட்சிகள் பலவற்றின்
பாரம்பரியமாகவும் இருக்கிறது.
ஆனால் திருச்சியில்நடந்த நரேந்திர மோடி கூட்டத்தின்போது இப்படி எந்த
சீனையும் காண முடியவில்லையாம். இதனால் மோடி எதிர்ப்பாளர்களுக்கும்,
பாஜகவைப் பிடிக்காதவர்களுக்கும் பெரும் ஏமாற்றமாகியுள்ளதாம். பாரீர்
பாரீர்.. பாஜக கூட்டத்தில் நடந்த கசமுசாவைப் பாரீர் என்று சொல்ல முடியாத
நிலை ஏற்பட்டு விட்டதாம்.
இதுபோன்ற கூட்டங்கள் நடந்தால், அது முடிந்ததும் அந்த மைதானத்தில்
குப்பை சேகரிப்போர் கூட்டமாக வருவார்கள். காரணம், காலி மது பாட்டில்கள்,
வாட்டர் பாட்டில்கள் உள்ளிட்டவை பெருமளவில் கிடைக்கும் என்பதால். ஆனால்
திருச்சி கூட்டம் நடந்து முடிந்த மறு நாள் காலையில் இதுபோல வந்த ஐந்து
பேருக்கு ஏமாற்றமே காத்திருந்ததாம்.
அந்த ஐந்து பேரும் கையில் பெரிய கோணிப் பையுடன் வந்ததைப் பார்த்த
போலீஸார் அவர்களை நிறுத்தி என்ன என்று விசாரித்துள்ளனர். அதற்கு அவர்கள்,
நாங்கள் திருச்சி சுப்பிரமணியபுரத்திலிருந்து வருகிறோம் சார். அரசியல்
கூட்டம், மாநாடு நடந்தால் அடுத்த நாள் காலையில் வந்து காலியாக கிடக்கும்
மது பாட்டில்களை எடுத்து சேகரித்து விற்போம். அதில் எங்களுக்கு
பாட்டிலுக்கு 50 பைசா முதல் ஒரு ரூபாய் வரை கிடைக்கும்.
இதுபோல கூட்டம் நடந்தால் குறைந்தது ரூ. 200லிருந்து 400 வரை பார்த்து விடுவோம்.
கடந்த முறை இங்கு நடந்த திமுக கூட்டத்திற்குப் பின்னர் அடுத்த நாள்
வந்து 1500 காலி மது பாட்டில்களைச் சேகரித்தோம். ஆனால் இன்று எங்களுக்கு
அதிர்ச்சி தரும் வகையில் ஒரு காலி மது பாட்டிலைக் கூட இங்கு காணவில்லை.
மைதானம் முழுவதும் சலித்து விட்டோம். எதுவும் தேறவில்லை என்று
ஏமாற்றத்துடன் கூறினராம்.
ஆச்சரியம்தான்....
No comments:
Post a Comment