Thursday, October 3, 2013

ஏர்போர்ட்டில் 6வது முறையாக கூரை உடைந்து தொங்கியது - www.tnfinds.com - Best site in the world

ஏர்போர்ட்டில் 6வது முறையாக கூரை உடைந்து தொங்கியது


மீனம்பாக்கம் :  சென்னை உள்நாட்டு புதிய முனையத்தின் மேல் தளத்தில் பயணிகள் புறப்பாடு பகுதி உள்ளது.  நேற்று மாலை 6 மணியளவில் அங்குள்ள ஜெட் ஏர்வேஸ் கவுன்டருக்கு மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூரை 6 அடி நீளம், 2 அடி அகலத்திற்கு திடீரென பயங்கர சத்தத்துடன் உடைந்து தொங்கியது. இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்களும் போர்டிங் பாஸ் வாங்குவதற்கு காத்து நின்ற பயணிகளும் அலறியடித்து கொண்டு ஓடினர்.

 மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மதுரை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய 3 விமானங்களில் பயணம் செய்ய 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அவர்கள்  பீதி அடைந்தனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலைய அதிகாரிகளும் பாதுகாப்பு படையினரும் விரைந்து வந்தனர்.  ஏணி கொண்டு வரப்பட்டு, ஊழியர்கள் மேலே ஏறி தொங்கி கொண்டிருந்த கூரையை துண்டித்து இறக்கினர். கடைநிலை ஊழியர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்தனர்.

பின்னர் வழக்கம்போல் பணிகள் நடந்தன. யாருக்கும் காயமோ, விமான போக்குவரத்தில் பாதிப்போ ஏற்படவில்லை. கடந்த மே 13ம் தேதியிலிருந்து இதுவரை 6 முறை கூரை உடைந்து விழுந்துள்ளது பயணிகள், அதிகாரிகள், ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
More news click here... 

No comments: