காஷ்மீர் மாநிலத்தில் 10 நாட்களாக தொடரும் துப்பாக்கி சண்டை : தேடுதல் வேட்டையில் இந்திய ராணுவம்
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் பூன்ச் எல்லையில் மக்கள் நடமாட்டம் இல்லாத
சலாபட் கிராமத்தில் 10 நாட்களுக்கு முன்பு 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள்
ஊடுருவினர். அவர்களுடன் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த சிறப்பு அதிரடி படை
வீரர்களும் பதுங்கியிருப்பதாக இந்திய ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதை
தொடர்ந்து சலாபட் கிராமத்தை இந்திய ராணுவம் சுற்றி வளைத்து தாக்கத்
தொடங்கியது. இன்று காலை வரை தொடர்ந்து 10 நாட்களாக இங்கு துப்பாக்கி சண்டை
நடைபெற்று வருகிறது.
இந்திய தரப்பில் 5 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை. எதிர்தரப்பில் உயிர் சேதம் குறித்து உடனடியாக தகவல் இல்லை. சலாபட் மோதல் மற்றொரு கார்கில் யுத்தமாக கருதப்படுகிறது. இதற்கிடையில் ஸ்ரீநகர் அருகே ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நேற்றிரவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து அந்த வீட்டை போலீசாரும் பாதுகாப்பு படையினரும் சுற்றி வளைத்தனர். அப்போது வீட்டில் ஒளிந்திருந்த தீவிரவாதி ஒருவர், போலீசாரை நோக்கி எந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 4 போலீசார் காயம் அடைந்தனர்.
நள்ளிரவு வரை துப்பாக்கி சண்டை நீடித்தது. இதற்கிடையில் பதுங்கியிருந்த தீவிரவாதி அங்கிருந்து தப்பினார். அவரை பிடிக்க தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment