அதிக லாபம் தரும் கடன் பத்திரங்கள்!!!
சென்னை: வங்கி அல்லது நிறுவனங்களின் நிலையான வைப்புகளை காட்டிலும்,
மாற்றத்தகாத கடன் பத்திரங்கள் (என்சிடி) முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை
ஈட்டித்தரக்கூடிய ஆற்றல் வாய்ந்தது. இவ்வாறான என்சிடிகள் பங்கு சந்தைகளில்
பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த என்சிடிகள் உங்களுக்கு நியாய விலையில்
கிடைத்தால், கண்டிப்பாக ஈட்டம் மிக சிறப்பாக இருக்கும். பட்டியலிலுள்ள
சிறந்த 4 என்சிடிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
இந்தியா இன்ஃபோலைன் என்5 தொடர் என்சிடிகள், 12.75% கூப்பன்
விகிதத்தில் வழங்கப்படுகின்றன. இந்த என்சிடிகள், தற்போது ரூ.1013 என்ற
விலையில் பட்டியலிடப்பட்டுள்ளன, நீங்கள் இப்போது இவற்றை வாங்கினால்,
13%க்கும் அதிகமாக ஈட்டம் பெற முடியும். இந்த என்சிடிகளுக்கான வட்டி
ஒவ்வொரு வருடமும், நவம்பர் 1ம் தேதியன்று வழங்கப்படும். இது செப்டம்பர்
2018 இல் காலவதியாகிறது.
தற்போது முத்தூட் ஃபைனான்ஸ் என்சிடிகள், தேசிய பங்கு சந்தையில்
ரூ.1023 என்ற விலையில் வழங்கப்படுகின்றன. இவற்றின் கூப்பன் விகிதம் 11.75%
ஆகும். நீங்கள் இப்போது இவற்றை வாங்கினால், நவம்பர் மற்றும் ஏப்ரலில்
நிச்சயமாக கிட்டதட்ட 13% வட்டி வருமானம் ஈட்ட முடியும். இந்த கடன்
பத்திரங்கள் அடுத்த ஆண்டு நவம்பரில் காலவதியாகிறது.
ரெலிகேர் ஃபின்வெஸ்ட் என்1 தொடர் என்சிடிகளின் கூப்பன் விகிதம் 12.25%
ஆகவும் இதன் தற்போதைய சந்தை விலை ரூ.1031 ஆகவும் உள்ளன. இதற்கான வட்டி
ஏப்ரல் 1, 2014 அன்று செலுத்தப்படும், ஆகவே இப்போது இதை நீங்கள்
வாங்கினால், கிட்டத்தட்ட 13% ஈட்டம் பெற முடியும். இந்த கடன் பத்திரங்கள்
அக்டோபர் 2015இல் காலவதியாகின்றன.
இந்தியா இன்ஃபோலைன் என்6 தொடர் என்சிடிகள் 12.75% கூப்பன் விகிதத்தில்
வழங்கப்படுகின்றன. ரூ.1032 என்ற தற்போதைய சந்தை விலையில் இதை வாங்கினால்,
கிட்டத்தட்ட 13.52% ஈட்டம் பெற முடியும்.
தற்போதைய வங்கி வைப்பு வட்டி விகிதங்களுடன் ஒப்பிடுகையில், என்சிடிகள்
மூலம் மிகச் சிறந்த ஈட்டம் பெற முடியும். இதில் ஒரு நன்மை என்னவென்றால்,
வங்கி வைப்புகள் போன்று, என்சிடிகளில் டிடிஎஸ் பிடிக்கப்பட மாட்டாது.
இருப்பினும் இதன் வட்டி வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டும், எனவே உங்கள்
மொத்த வருமானத்தோடு இதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
என்சிடிகள் வங்கி வைப்பு நிதிகள் போன்று பாதுகாப்பானது அல்ல என்பதால்,
இதில் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில்
வைத்திருங்கள்.
More News Click here....
More News Click here....
No comments:
Post a Comment