Tuesday, October 1, 2013

திகார் சிறையில் மிஸ் யூனிவர்ஸ் ஒலிவியா: என்ன செய்தார் தெரியுமா? - www.tnfinds.com - Best Site in the World

திகார் சிறையில் மிஸ் யூனிவர்ஸ் ஒலிவியா: என்ன செய்தார் தெரியுமா?

டெல்லி: பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற ஒலிவியா கல்போ டெல்லியில் உள்ள திகார் சிறைக்கு சென்றார். பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் ஈடுபட மாட்டோம் என்று கைதிகளை உறுதிமொழி எடுக்கச் செய்தார். பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒலிவியா கல்போ 10 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பெண் குழந்தையின் முக்கியத்தவும், பெண்கள் முன்னேற்றம் குறித்து எடுத்துரைக்கிறார். மேலும் இந்திய மக்களிடையே எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். இந்நிலையில் அவர் டெல்லியில் உள்ள திகார் சிறைக்கும் சென்று கைதிகளை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு சிறையை சுற்றிக் காட்டிய அதிகாரிகள், கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் குறித்தும் விளக்கினர். மேலும் சிறையில் உள்ள இசைக்குழுவினர் நடத்திய கலை நிகழச்சியை அவர் கண்டு களித்தார்.

 
குர்காவ்னில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பெண் குழந்தையை காப்போம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்த ஒலிவியா.

கடந்த சனிக்கிழமை டெல்லியில் உள்ள சுலப் பப்ளிக் ஸ்கூலுக்கு சென்ற ஒலிவியா மெஹந்தி போட்டுக் கொண்டார்.

 
சுலப் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுடன் டான்ஸ் ஆடிய ஒலிவியா கல்போ.

 
டெல்லியில் உள்ள சுலப் கிராமிற்கு சென்ற ஒலிவியாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 
எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடந்த வாக் ஃபார் லைப் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒலிவியா.

 
ஒலிவியா நேற்று திகார் சிறைக்கு சென்றபோது பெண்களுக்கு எதிராக கொடுமைகளை செய்ய மாட்டோம் என்று கைதிகளை உறுதிமொழி எடுக்க வைத்தார்.
 More News Click Here.......
 
 
 
 
 

No comments: