மணல் கொள்ளை...நீதிமன்றத்தின் கண்டனத்துக்குள்ளான காஞ்சிபுரம் ஆட்சியர் சஸ்பென்ட்
சென்னை: மணல் கொள்ளை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த
கண்டனத்தையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்தரசேனன் சஸ்பென்ட்
செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரத்தில் பல்வேறு கிராமங்களில் மணல் கொள்ளை நடைபெறுவதாகவும் அதனை
தடுக்க வலியுறுத்தியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பூந்தமல்லி வட்டார ஆற்று
மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் கடந்த 19ந் தேதி நீதிபதி மணிகுமார் காஞ்சிபுரம் மாவட்ட உயர்
அதிகாரிகளுக்கு சில கண்டனங்களை தெரிவித்து இருந்தார்.
இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்திரசேனனை சஸ்பென்ட்
செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment