Thursday, October 10, 2013

ஏற்காடு தனித் தொகுதி இடைத் தேர்தல்... பாமக என்ன செய்யப் போகிறது? - www.tnfinds.com - Best Site in the World

ஏற்காடு தனித் தொகுதி இடைத் தேர்தல்... பாமக என்ன செய்யப் போகிறது?


சேலம்: ஏற்காடு தனித் தொகுதிக்கு நடைபெறவுள்ள சட்டசபை இடைத் தேர்தலில் பாமக என்ன நிலைப்பாட்டை எடுக்கவுள்ளது என்பது ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. ஏற்காடு தொகுதியில், சட்டசபை உறுப்பினராக இருந்த பெருமாள் மரணமடைந்ததைத் தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ம்தேதி அங்கு இடைத் தேர்தல் நடைபெறும். அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலில் முதல் நபராக திமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. திமுக வேட்பாளர் நேர்காணலையும் அக்கட்சி முதல் ஆளாக அறிவித்துள்ளது. அத்தோடு நில்லாமல், திமுகவுக்கு ஆதரவு கேட்டு கட்சித் தலைவர் கருணாநிதி பகிரங்கமாக கடிதமும் வெளியிட்டுள்ளார். ஆளுங்கட்சியான அதிமுக எப்படியும் நமக்கே வெற்றி என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது. மற்ற கட்சிகளின் நிலைப்பாடு இன்னும் தெளிவாகவில்லை. திமுகவுக்கு ஆதரவு தர மாட்டோம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறி விட்டன. தற்போது பாமகவின் நிலைப்பாடு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு ஆதரவு தர மாட்டோம் என்று ஏற்கனவே டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். எனவே திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக என எதற்குமே அக்கட்சி ஆதரவு தராது என்று நம்பலாம். அக்கட்சி போட்டியிடுமா அல்லது வேறு யாருக்கு ஆதரவு என்பதும் தெரியவில்லை. தனது செல்வாக்கை உரசிப் பாக்க இந்த ஏற்காட்டை களமாக எடுத்துக் கொள்ள பாமக முயலும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. ஆனால் அதை எப்படி அது செய்யப் போகிறது என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments: