Wednesday, October 2, 2013

கோவில் கட்டுவதற்கு முன்பு டாய்லெட்டுகளைக் கட்டுங்கள்.. மாணவர்களுக்கு மோடி அழைப்பு - www.tnfinds.com - Best site in the World

கோவில் கட்டுவதற்கு முன்பு டாய்லெட்டுகளைக் கட்டுங்கள்.. மாணவர்களுக்கு மோடி அழைப்பு

டெல்லி: இந்துத்வாவாதி என்பது எனது அடையாளமாக இருக்கலாம். ஆனால் என்னைக் கேட்டால் கோவில் கட்டுவதற்கு முன்பு நாம் கழிப்பறைகளைக் கட்ட வேண்டும் என்றுதான் சொல்வேன் என்று கூறியுள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. டெல்லியில் நடந்த கல்லூர மாணவர்களுடனான சந்திப்பின்போதுதான் இந்த அழைப்பை வெளியிட்டார் அவர். கிட்டத்தட்ட 700 மாணவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது மதச்சார்பின்மை என்றால் என்ன என்பதற்கும் விளக்கம் அளித்தார் மோடி.

மதச்சார்பின்மை என்றால் நாடே பிரதானம், இந்தியாவே பிரதானம் என்பதுதான் எனது கருத்து. அதுதான் உண்மையான மதச்சார்பின்மை. அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். யாருக்கும் சார்பாக நடக்கக் கூடாது. வாக்கு வங்கி அரசியல் கூடாது. இதுதான் உண்மையான மதச்சார்பின்மை.

எனது குடும்பத்தில் யாருக்குமே அரசியல் என்றால் என்ன என்றே தெரியாது. நான் டீக் கடையில் டீ விற்றவன். ரயிலில் டீ விற்றுள்ளேன். இன்று உங்கள் முன்பு நின்று கொண்டிருக்கிறேன்.

 
எனவே உங்களது பின்னணி குறித்துக் கவலைப்படாதீர்கள். நாட்டை மாற்ற விரும்பினால் தொடர்ந்து நடங்கள், நிச்சயம் பாதை புலப்படும் என்றார் மோடி.

 
இந்த சந்திப்பின்போது தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் உடன் இருந்தார்.

 
கூட்டத்தில் நாயுடுவும் பேசினார். அப்போது காங்கிரஸைத் தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
More News Click here........
 
 
 

 

No comments: