நாடாளுமன்ற தேர்தலுக்குள் தேமுதிகவின் நிலைமை முடிந்துவிடும்: நாஞ்சில் சம்பத்
விழுப்புரம்: வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் தேமுதிகவின் நிலைமை
முடிந்துவிடும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத்
தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் நடந்த அதிமுக அரசின் 2 ஆண்டு சாதனை
விளக்க பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர்
நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
தமிழகத்தின் தன்னிகரில்லா முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் மக்கள்
அனைத்து வகையிலும் நிறைவாக வாழ்கின்றனர். ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரம்
உயரத் தேவையான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
இங்கு கூடியிருக்கும் மக்களை பார்க்கையில் இது நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்
கூட்டமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. முதல்வரின் சாதனைகள் குறித்து கேட்க
வந்த மக்கள் கூட்டம் இது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
தங்களால் தான் அதிமுக ஆட்சிக்கு வந்ததாக தேமுதிகவினர் கூறினர். அப்படி
என்றால் சட்டசபை தேர்தலுக்கு பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தல்களின்போது
எங்கு சென்றீர்கள்?. உங்கள் நிலைமை என்ன ஆனது. இது தான் தேமுதிகவின் நிலை
ஆகும். அனேகமாக வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் தேமுதிகவின் நிலைமை
முடிந்துவிடும் என்று நினைக்கிறேன்.
திமுக சந்திக்கும் கடைசி தேர்தல் இந்த நாடாளுமன்ற தேர்தல் தான்
என்பதையும் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழ் ஈழம் பற்றி பேச
கருணாநிதிக்கு தகுதி இல்லை. பதவியில் இருந்த போது எல்லாம் அமைதியாக
இருந்துவிட்டு தற்போது டெசோ அமைப்பை அமைத்துக் கொண்டு பேசுகிறார்
கருணாநிதிக்கு தைரியம் இருந்தால் டெசோ கூட்டத்தை கூட்டி அதில் இலங்கை
அதிபர் ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்று தீர்மானம் நிறைவேற்றி அதை
மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பாரா என்று கேட்கிறேன்.
கடந்த 2006ம் ஆண்டு திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது தான் தமிழக
மக்கள் செய்த தவறு ஆகும். அதன் பலனாக இலங்கையில் 4வது தமிழினப் போர்
நடந்தது. அதில் 1,70,000 ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆனால் தான் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும்
பேரறிஞர் அண்ணா ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்றார். ஆனால் முதல்வர்
அம்மாவோ 20 கிலோ அரிசியை இலவசமாக அளித்து மக்களின் பசியை போக்கியவர்.
இப்படி கேட்காமலேயே கொடுக்கும் முதல்வருக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில்
அமோக ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று நாஞ்சில் சம்பத்
தெரிவித்தார்.
More News Click here........
More News Click here........
No comments:
Post a Comment