மாணவிகள் திடீர் அரை நிர்வாண போராட்டம்
அங்கேரி
நாட்டிலுள்ள காபோஸ்வார் பல்கலைக்கழகம் மாணவ, மாணவிகளுக்காக கடந்த 1-ந்தேதி
ஆடை கட்டுப்பாடு கொண்டு வந்தது. அதன்படி மாணவிகள் குட்டை ஸ்கர்ட் மற்றும்
தாழ்வான கழுத்துள்ள மேலாடை, மாணவர்கள் மங்கிய நிறமுள்ள ஆடை அணிய தடை
போட்டது. கூந்தலை அலங்கோலமாக விடக்கூடாது. நகத்தை ஒழுங்காக பராமரிக்க
வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதித்தது.இந்த
ஆடைக்கட்டுப்பாட்டிற்கு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகளில் சிலர் எதிர்ப்பு
தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 10 மாணவிகள் மேலாடை எதுவும்
அணியாமல் கால்சட்டை மட்டுமே அணிந்து கொண்டு வகுப்புக்கு சென்றனர்.
சிறிதுநேரத்திற்கு பிறகு விரிவுரையாளரின் வேண்டுகோளை ஏற்று முழுமையான ஆடையை
அணிந்து கொண்டு வகுப்புக்கு திரும்பினார்கள்.
No comments:
Post a Comment