வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்
பிராவோ, தமிழ் படத்தில் நடனம் ஆடுகிறார்
சென்னை, அக்.7-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் வெயின் பிராவோ ஒரு தமிழ் படத்தில் நடனம் ஆடுகிறார். பிராவோவெஸ்ட்
இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
வீரருமான வெய்ன் பிராவோ சென்னை வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு
பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-நான் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த
டிரினி டாட் என்ற ஊரில் இருந்து வருகிறேன். இந்தியாவை போல் எங்கள் ஊரும்
கலாசாரம், பண்பாடுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற இடம். குறிப்பாக தமிழ்
பண்பாடு பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன்.நடனம் என்றால் எனக்கு
மிகவும் பிடிக்கும். என்னை ஒரு தமிழ் படத்தில் நடனம் ஆடும்படி கேட்டார்கள்.
தமிழ் கலாசாரம், பண்பாடு என்னை கவர்ந்து இருப்பதால், தமிழ் படத்தில் நடனம்
ஆடுவதற்கு உடனே சம்மதித்தேன்.‘உலா’நான் நடனம் ஆடும் தமிழ்
படத்தின் பெயர், ‘உலா’. இந்த படத்தை ஸ்ரீகாந்த் தயாரிக்கிறார் (இவர்
‘சித்திரம் பேசுதடி’ படத்தை தயாரித்தவர்). ராஜன்மாதவ் டைரக்டு செய்கிறார்
(இவர் ‘முரண்’ படத்தை டைரக்டு செய்தவர்). படப்பிடிப்பு இன்று (திங்கட்கிழமை) ஏவி.எம். ஸ்டூடியோவில் தொடங்குகிறது. ஷாரூக்கான்இந்திய
நடிகர்களில் ஷாரூக்கான் எனக்கு பிடிக்கும். நடிகைகள் யாரையும் எனக்கு
தெரியாது. தமிழ் படங்களை இதுவரையில் பார்த்தது இல்லை. இனிமேல் பார்க்க
வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.இவ்வாறு வெய்ன் பிராவோ கூறினார்.ஆடுகளத்தில்நடனம்பொதுவாகவே
வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட் வீரர்கள் போட்டியின்போது, எதிரணியின்
விக்கெட்டுகள் விழும்போது, எதிரணியை தோற்கடிக்கும்போது தங்கள் மகிழ்ச்சியை
நடனமாடி கொண்டாடுவார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் ‘கங்னம் ஸ்டைல்’
நடனம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவை. அந்த வகையில் வெஸ்ட்
இண்டீஸ் அணியின் கேப்டன் வெய்ன் பிராவோ ஆடுகளத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களை
வீழ்த்தும்போதும், கேட்ச் செய்து ஆட்டம் இழக்க செய்யும்போதும் நடனமாடி தனது
மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். பிராவோவின் நடனத்துக்கு என்று தனி ரசிகர்
பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment