இனி புதுப் படங்களில் நடிக்க மாட்டேன் - சமந்தா ஸ்ட்ரைக்!
இனி புதுப்படங்களில் நடிப்பதில்லை என ஸ்ட்ரைக்கை அறிவித்துள்ளார்
நடிகை சமந்தா. ஆனால் இந்த ஸ்ட்ரைக் நல்ல வேடங்கள் கிடைக்கும் வரைதானாம்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான சமந்தா, கடந்த ஆண்டு பெரிய பட
வாய்ப்புகளை மிஸ் பண்ணிவிட்டார்.
அதற்கு வட்டியும் முதலுமாகச் சேர்ந்து இந்த வருடம் பெரிய ஹீரோக்களின்
படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு திடீர் அறிவிப்பை
வெளியிட்டள்ளார். அதை ‘ஸ்டிரைக்' என்று குறிப்பிட்டுள்ள அவர், ‘இனி எந்த
புதுப்படங்களிலும் நான் நடிக்கப் போவதில்லை. எனக்கு பிடித்தமான, சிறந்த
கதாபாத்திரம் கொண்ட படங்கள் கிடைக்கும்வரை இந்த முடிவில் உறுதியாக இருக்கப்
போகிறேன்," என்று அறிவித்துள்ளார்.
ஆனாலும் தான் ஏற்கெனவே நடிக்க ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து
முடிப்பேன் என்றும் அறிவித்து, தயாரிப்பாளர், இயக்குநர்கள் வயிற்றில் பால்
வார்த்துள்ளார்.
ஏன் இந்த திடீர் முடிவு? அதற்கும் பதில் வைத்திருக்கிறார் சமந்தா.
"எனது திறமையை சரியாக வெளிப்படுத்தாவிட்டால் என்னை ரசிகர்கள்
ஒதுக்கிவிடுவார்கள். அதனால்தான் இப்படி முடிவெடுத்திருக்கிறேன்' என்று
விளக்கம் அளித்துள்ளார்.
சமந்தா தமிழில் நடித்த ‘நான் ஈ' பெரும் வெற்றி பெற்றாலும், அதன்பிறகு
அவர் நடித்த ‘நீதானே என் பொன்வசந்தம்' படம் எதிர்பார்த்த வெற்றியைப்
பெறவில்லை. ஆனாலும் விஜய், சூர்யா பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. தெலுங்கில்
தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இந்த நேரத்தில் இப்படி ஒரு
முடிவு ஏன் என ரசிகர்கள் அவரைக் கேட்டுள்ளனர்.
No comments:
Post a Comment